தெர்மா பிளீஸ் – இடவசதிகளை ஏற்படுத்தும் உள் அறை சுவர் கட்டமைப்பு!

Filed in பயனுள்ள தகவல்கள் by on February 11, 2016 0 Comments

நமதூர் அடியக்கமங்கலம் அதன் சுற்று வட்டார முஸ்லிம்கள் வசிக்கும் ஊர்களில்,  பழங்காலத்தில் கட்டமைக்கப்பட்ட வீடுகளின் அறைகள் அல்லது இன்றைய காலத்தில் கட்டும்  வீடுகளின் அறைகள் ஒவ்வொன்றும் விசாலமான இட வசதியை கொண்டிருக்கும். சதுர அடிகள் விலை நிர்ணயத்தில் முக்கிய பங்கு வகிப்பதால் அறைகளின் பரப்பளவுகள் சுருங்கி கொண்டே வருகின்றன. ஆயினும் ஒருசில அறைகள் விசாலமாக அமைந்திருக்க வேண்டும் என்பதே பலருடைய எதிர்பார்ப்புகளாக இருக்கின்றன.

பழமையில் புதுமை

InternalPartition
அதற்கேற்பவே கட்டுமான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். பழைய வீடுகளையும் தற்போதைய கால கட்டத்திற்கேற்ப மாற்றி அமைக்க ஆர்வம் காட்டுகிறார்கள். அதிலும் உள் அலங்கார வேலைப்பாடுகளில் பழமையின் பிரதிபலிப்பு எதிரொலிக்காத வண்ணம் புதுமையை புகுத்துவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். எனினும் பழமையும், புதுமையும் கலந்து வீட்டிற்கு புதுமையான தோற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கின்றன.

அறைகள் விசாலமாக காட்சியளிப்பது பார்க்க அழகாக இருக்கும் என்றாலும் அதுவே சில சமயங்களில் சிரமத்தை ஏற்படுத்துவதாக அமைந்து விடும். அதாவது பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கு மெனக்கெட வேண்டியிருக்கும். அது தவிர வீட்டில் உள்ளவர்கள் புழங்குவதற்கு வசதியாக கூடுதல் அறைகள் தேவைப்படும் சூழலும் உருவாகும். பிள்ளைகள் வளர்ந்து ஆளாகும்போது அவர்களுக்கு படிக்கும் அறை, படுக்கை அறைகளை தனியாக ஏற்படுத்தி கொடுக்க விரும்புவார்கள்.

 இட வசதி

அறைகள் விசாலமாக இருக்கும் பட்சத்தில் அவற்றை பிரித்து தேவைக்கேற்ப தனி, தனி அறைகளை அமைக்க நினைப்பார்கள். அப்படிப்பட்ட சூழலில் ஒரே அறையை பிரித்து இரண்டு, மூன்று உள் அறைகளாக மாற்றுவதற்கு முயற்சிப்பார்கள்.  அதற்காக வீட்டுக்குள்ளேயே தடுப்பு சுவர்களை அமைத்தால் அதுவே பாதி இடத்தை ஆக்கிரமித்து விடும். சுவர்களின் தடிமானத்தை குறைத்தால் தான் அறைக்குள் ஓரளவு இட வசதியை ஏற்படுத்த முடியும். அதற்காக சுவர் தடிமனை வெகுவாக குறைத்துவிடவும் முடியாது என்பதால் தடுப்பு சுவர்களை செங்கல் கட்டுமானமாக அமைக்காமல் பலவித யுக்திகளை கையாள்கிறார்கள். மெல்லிய தடுப்பு சுவர்களை தாங்கிய பலவகையான கட்டமைப்புகள் பரவலாகி வருகின்றன.

வெப்ப தாக்கம்

அவற்றுள் ஒன்றாக அமைந்திருக்கிறது தெர்மா பிளீஸ் எனப்படும் சுவர் கட்டமைப்பு. இந்த தடுப்பு சுவர் அமைப்பு பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டவையாக அமைந்திருக்கிறது. இது சுவர்கள் வாயிலாக அறைக்குள் வெப்பம் உள் நுழைவதை தடுப்பதில் பெரும் பங்காற்றுகிறது.

ஆதலால் கோடை காலங்களில் இந்த தடுப்பு சுவர்களை தற்காலிகமாகவும் அமைத்து அறைகளை வெப்ப தாக்கத்தில் இருந்து விடுவிக்கலாம். மேலும் இந்த சுவர்கள் ஒலி, ஒளி ஊடுருவும் திறன் கொண்டவையாகவும் இருக்கிறது. இதனை சுவராக மட்டும் அல்லாமல் மேற்கூரை அமைப்பதற்கும் பயன்படுத்தலாம். மேலும் தரைத்தளத்திலும் பயன்படுத்தும் வண்ணம் இந்த தொழில்நுட்பம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விசாலமான அறைகள்

வீடு கட்டுமான பணியின்போதே எதிர்கால தேவை பற்றிய திட்டமிடல் இருக்க வேண்டியது அவசியம். தேவையில்லாமல் தடுப்பு சுவர்களை அறைகளுக்குள் அமைப்பது  கட்டுமான செலவுகளை எகிற வைத்து விடும். சில காலத்திற்கு பிறகு அறைகளில் மாற்றம் செய்ய நினைக்கும்போது சுவர்கள் இடையூறு ஏற்படுத்துவதாக அமையும். அவைகளை இடித்துவிட்டு அறையை விசாலப்படுத்த வேண்டியதிருக்கும்.

இதுபோன்ற பிரச்சினைகளுக்கு ஆரம்பத்திலேயே கட்டுமான பணியின்போது விசாலமாக அறைகளை அமைத்துவிட்டால் தேவைக்கேற்ப தடுப்பு சுவர்களை ஏற்படுத்தி கொள்ளலாம். அது கட்டுமான செலவையும் மிச்சப்படுத்தும். தற்போது எடை குறைவாக இருந்தாலும் வலுவான தன்மையுடன் கூடிய தடுப்பு சுவர்கள் சந்தைகளில் கிடைக்கின்றன. தெர்மோ பிளீஸ் சுவர் அமைப்பும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டதாக இருக்கிறது. அவைகள் மேற்கூரை,
தரை தளத்திலும் பயன்படுத்தும்படி  அமைந்திருப்பது அறைகளுக்கு கூடுதல் அழகு சேர்ப்பதாக இருக்கிறது.

(Visited 58 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)