பட்டாவில் கவனம் வேண்டும்!

Filed in பயனுள்ள தகவல்கள் by on February 20, 2016 0 Comments

Patta

சொத்து வாங்கும்போது கிரயப் பத்திரத்தில் அடங்கியிருக்கும் சாரம்சங்களை ஆராய்ந்து இறுதி முடிவெடுப்பதுடன் பரிவர்த்தனை முடிவடைந்து விடுவதில்லை. ஒரிஜினல் கிரயப் பத்திரத்தை சரிபார்ப்பதுடன் பட்டாவையும் கேட்டு பெற வேண்டும்.

சொத்து விற்பனை

சொத்தின் உரிமையை நிலைநாட்டும் முக்கிய அங்கமான பட்டா மீதும் கவனம் பதிப்பதும் அவசியம். சிலர் கிரயப்பத்திரம் பதிவு செய்வதற்கு காட்டும் அக்கறையை பட்டா வாங்குவதற்கு காட்டுவதில்லை.

பட்டா வாங்காமலேயே கிரயப்பத்திரத்தை மட்டும் வைத்துக்கொண்டு சொத்தை விற்பனை செய்வதற்கு முயற்சிக்கலாம். பட்டாவை பின்னர் வாங்கி கொள்ளலாம் என்றும் கூறலாம். சொத்தை விற்பனை செய்பவரின் கைவசம் பட்டா இல்லாவிட்டால் அந்த சொத்தை வாங்குவதில் உஷாராக இருக்க வேண்டும்.

மறுக்கப்பட்டிருக்கலாம்

சில சமயம் விற்பனை செய்யப்படும் இடத்திற்கு பட்டா வழங்கப்படாததற்கு வேறு சில காரணங்களும் இருக்கலாம். குறிப்பாக அது அரசின் கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் இடமாக வரையறை செய்யப்பட்டு இருக்கலாம். அது பற்றிய விவரம் சொத்தை வாங்கியவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்.

அதனால் அந்த இடத்திற்கு பட்டா மறுக்கப்பட்டிருக்கலாம். ஆதலால் சொத்தை விற்பனை செய்பவரிடம் பட்டா இருக்கிறதா? என்பதை உறுதிபடுத்திக்
கொள்வதுடன் அதனை சரி பார்ப்பதும் அவசியம்.

பெயர் மாற்றம்

சிலர் பாகப்பிரிவினை சொத்தை விற்பனை செய்வதற்கு முயற்சிக்கும்போது அவர் வசம் குடும்பத்தினர் அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக கூட்டு பட்டா இருக்கலாம். அத்தகைய பட்டா கொண்ட சொத்தை வாங்குவதற்கு மெனக்கெட வேண்டியிருக்கும். அவர் தனியாக பட்டா பெற்று பின்னர் அந்த பட்டாவை உங்கள் பெயருக்கு மாறுதல் செய்ய வேண்டியிருக்கும். அதற்கு கால அவகாசம் தேவைப்படும். ஆதலால் பட்டாவின் தன்மையை முன்கூட்டியே அறிந்து கொள்வது நல்லது.

(Visited 49 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)