ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்! ஆன்-லைன் படிப்புகள்!

பொருளாதார சூழ்நிலையால் வெளிநாட்டுக்கு சென்று படிக்க முடியவில்லையே என்ற கவலை இனி வேண்டாம். அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியினால், சர்வதேச கல்வி, எங்கும், எப்போதும் சாத்தியமாகிறது!

ஆம், இணைய வழி சேவை மூலம், உலகில் நீங்கள் எந்த மூலையில் இருந்தாலும், உங்களது விருப்பத்திற்கு ஏற்ப உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் சான்றிதழ், டிப்ளமோ, பட்டப் படிப்பு படிக்கும் வாய்ப்பை பெற முடியும்!

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
பலருக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் எளிதில் கிடைத்திடாது. இருப்பினும் ஆன்லைன் மூலம் அங்கு பட்டம் பெறும் வாய்ப்பினை பெறலாம்.

சான்றிதழ் படிப்புகள்: தொல்பொருளியல் மற்றும் மானுடவியல், வர்த்தகம் மற்றும் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணிதம், எழுத்து, இலக்கியம், திரைப்படம் சார்ந்த படிப்புகள், பொருளாதாரம் மற்றும் அரசியல், கல்வி மற்றும் ஆய்வு திறன், பொறியியல் மற்றும் தொலைத்தொடர்பு, சுற்றுச்சூழல் மற்றும் நகர்ப்புற ஆய்வுகள், கலை மற்றும் கட்டடக்கலை, வரலாறு, மொழி மற்றும் கலாச்சார ஆய்வுகள், சட்டம், மருத்துவ மற்றும் சுகாதார அறிவியல், இசை, இயற்கை அறிவியல், தத்துவம், மதம் மற்றும் இறையியல், உளவியல் மற்றும் ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு படிப்புகள்.

டிப்ளமோ படிப்புகள்: தகவல் தொழில்நுட்ப ஆய்வு மற்றும் வடிவமைப்பு, மற்றும் வரலாறு

விண்ணப்பிக்க கடைசி நாள்: டிப்ளமோ படிப்புகளுக்கு ஜூலை 29. சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஏதும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.conted.ox.ac.uk என்ற இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

(Visited 50 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)