மொபைல் நட்பு தளங்களை ஊக்குவிக்கும் முயற்ச்சியில் கூகுள் தேடல் மாற்றங்கள்

கூகுள் தேடல் மாற்றங்கள்*(Google Search algorithm)

கையடக்க அலைபேசிகளின் ஆதிக்கம் பெருகி வரும் நிலையில் தற்போது கூகிள் தேடல் இயந்திரமும்
அதில் முழு கவனம் செலுத்த துவங்கி விட்டது.

அதன் நடவடிக்கையாக தேடல் இயந்திரங்களின் தேடும் வழிமுறைகளை மேம்படுத்திக்கொண்டிருக்கிறது.
ஏற்கனவே மொபைல் நட்புடன்(mobile friendly) விளங்கும் இணையதள பகுதிகளுக்காக கூகிள் டெவெலப்பர் டூல் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலான ஐரோப்பிய யூனியன்களின் இணையதள பக்கங்களும்,விக்கிபீடியா,பி.பி.சி போன்ற
மிக பெரிய இணையதள சேவைகள் கூட முழுவதுமாக வெற்றிபெற முடியவில்லை.

இந்நிலையில் ஏப்ரல் 21 ம் தேதி முதல் கூகிள் அதன் தேடல் இயந்திரத்தை மொபைல் நட்புடன்(mobile friendly) விளங்கும் இணையதள பக்கங்களுக்காக மாற்றி அமைத்து கொண்டிருக்கிறது.

இதன் வரையறைகளில்(criteria) முக்கியமாக எழுத்தின் அளவு,பக்க இணைப்புகளுக்கு இடையேயான
அளவுகள் மற்றும் பக்கங்கள் மொபைலின் ஸ்கிரீன் அளவை பொறுத்து எவ்வாறு பொருந்துகிறது என்றெல்லாம் இருக்கும்.
கூகிள் பிரதிநிதி ஒருவர் இதைப்பற்றி சொல்லும்போது எந்த அளவுக்கு மொபைல் நட்புடன் இருக்கிறது என்பதை பொருத்தே தேடல் இயந்திரங்களில் அதன் தர மேம்பாடு அளவுகோல் இருக்கும்.

மக்களிடம் மொபைல் மூலம் இணையதளத்தில் உலவும் போக்கு அதிகமாவதால் தேடல் இயந்திரம் கொடுக்கும் பக்கங்கள் கால நேரம் மட்டுமில்லாமல் அந்த பக்கங்களை எவ்வளவு சுலபமாக பார்க்க வைக்க முடியும் என்பதில்தான் தேடல் இயந்திரங்களின் வெற்றி அமைந்துள்ளது

இணையதளங்கள் தங்கள் இணையபக்கத்தை மொபைல் நட்புடன் விளங்குகிறதா என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பில் செல்வதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

https://www.google.com/webmasters/tools/mobile-friendly/

amanaym webpage result:

mobile friendly website

 

 

 

 

 

 

 

 

 

 

 

(Visited 38 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)