மருத்துவ துறையில் 1202 பணிகள்

Medical_Field

மிழ்நாடு மருத்துவ சேவை தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.) அமைப்பு மருத்துவம் சார்ந்த பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பார்மசிஸ்ட், டார்க் ரூம் அசிஸ்டன்ட், லேப் டெக்னீசியன் போன்ற பணிகளுக்கு 1091 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பார்மசிஸ்ட் பணிக்கு 333 இடங்களும், டார்க் ரூம் அசிஸ்டன்ட் பணிக்கு 234 இடங்களும், லேப் டெக்னீசியன் பணிக்கு 524 இடங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும், பொது பிரிவினர் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மற்றவர்கள் 57 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். பார்மசி, டார்க் ரூம் அசிஸ்டன்ட், மெடிக்கல் லேபரேட்டரி டெக்னாலஜி போன்ற டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

விருப்பம் உள்ளவர்கள், குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு, 17–2–2016–ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

எம்.ஆர்.பி. அமைப்பு வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பின் படி, பிராஸ்தெட்டிக் கிராப்ட்ஸ்மேன், தெரபிஸ்ட், ஆடியோமெட்ரிசியன், இ.இ.ஜி. டெக்னீசியன் உள்ளிட்ட பணிகளுக்கு 111 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பணி சார்ந்த பட்டப்படிப்பு, சான்றிதழ் படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் : 10–2–2016

இவை பற்றிய விரிவான   www.mrb.tn.gov.in    என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

(Visited 31 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)