24–ந் தேதி முதல் கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டு செல்லாது!

24–ந் தேதி முதல் கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டு செல்லாது!

PP_Pic

சென்னை,

சென்னை மண்டல பாஸ்போர்ட்டு அதிகாரி கே.பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

சர்வதே விமான போக்குவரத்துக்கழகம் கையால் எழுதப்பட்ட பாஸ் போர்ட்டை வரும் 24–ம் தேதிக்குள் மாற்றிக்கொள்வதற்கு காலக்கெடு விதித்துள்ளது. இக்காலக்கெடு முடிந்த பிறகு, இத்தகைய பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்களுக்கு வெளிநாடு செல்ல விசா வழங்கப்பட மாட்டாது. 2001–ம் ஆண்டுக்கு பின்னர் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டு (எந்திரத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய பாஸ்போர்ட்டு) வைத்திருப்பவர்கள் மட்டுமே வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

2001–ம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டு மற்றும் 1980–90–ம் ஆண்டுகளுக்கு இடையே வழங்கப்பட்ட 20 ஆண்டுகள் செல்லுப்படியாகும் பாஸ்போர்ட்டுகளும் செல்லாத பாஸ்போர்ட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் 24–ந்தேதிக்குள் புதிய பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளவேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதுதொடர்பாக மேலும் விவரங்களை www.passportindia.gov.in என்ற பாஸ்போர்ட்டு சேவைகள் இணையதளத்திலும், 18002581800 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

 

Related URLs: www.passportindia.gov.in

(Visited 54 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)