இலவசமாக மல்டிமீடியா கற்றுக்கொள்ள

Filed in பயனுள்ள தகவல்கள் by on December 12, 2015 0 Comments

MULTI MEDIA FREE COACHING

FCP, AVID என்ற இருவகையிலான நான்லீனியர் எடிட்டிங், டிஜிட்டல் வீடியோகிராபி, டிஜிட்டல் ஸ்டில்போட்டோகிராபி, 3டிஅனிமேஷன், மல்டிமீடியா டிஸைனிங் (போட்டோஷாப் இல்லஸ்டிரேட், கோரல்டிரா, பிளாஷ்) ஆடியோ இன்ஜினியரிங் ஆகியன அரசின் சார்பில் இலவசமாகவே இதை கற்றுத் தருகிறார்கள். NFDC (NATIONAL FILM DEVELOPMENT CORPORATION) எனப்படும் தேசிய திறைப்பட வளர்ச்சிக் கழகத்தில் அடிப்படையாய் அழகாய் எளிய சில விஷயங்கள் கற்றுத் தரப்படுகின்றன. தமிழ் நாடு அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிதி பங்களிப்போடு இந்த இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.

18 வயதில் இருந்து 45 வயதிற்குள் இருக்கும் யார் வேண்டுமானாலும் இந்த இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி காலம்: 1 மாதம்.

பயிற்சி சென்னை,மதுரையில் நடைபெறுகிறது. மேலும் பொள்ளாச்சி அருகில் உள்ள ஆனைமலையில் பழங்குடியினத்தவருக்காக தனிப் பயிற்சி நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

பயிற்சியில் சேர:

10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்,கல்வி மாற்றுச் சான்றிதழ்,சாதிச் சான்றிதழ்,3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ,ரேஷன் கார்டு அசல் மற்றும் நகல் இவையெல்லாம் வேண்டும்.இதில் ரேஷன் கார்டை தவிர்த்து மற்ற சான்றிதழ்கள் பயிற்சி காலம் முடியும் வரை பயிற்சி மையத்தில் இருக்கும். பிறகு திருப்பி தந்து விடுவார்கள்.

இந்த இலவச பயிற்சிக்கான அடுத்த பேட்ஜ் டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்குகிறது. இரு பேட்ஜ்களாக பயிற்சிகள் நடைபெறும்.

நேர்முக தேர்வு மற்றும் பயிற்சி தொடர்பான கூடுதல் விவரங்களைப் பெற:

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் (NATIONAL FILM DEVELOPMENT CORPORATION)

கோ ஆப்டெக்ஸ் கிடங்கு கட்டட வளாகம்,

350,பாந்தியன் சாலை,

எழும்பூர்,

சென்னை.

என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.மேலும்

044-28192506

044-28192407

74189 20267

74189 20170

என்ற தொலைபேசி மற்றும் கைப்பேசி எண்களையும் தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம்.

(Visited 54 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)