2050ல் உலகில் அதிக முஸ்லிம்கள் இந்தியாவில் வசிப்பார்கள்: ஆய்வு

2050ஆம் ஆண்டில், உலகிலேயே அதிக முஸ்லிம் மக்கள் இந்தியாவில்தான் இருப்பார்கள் என ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.

mosque-prayer-495x330

அமெரிக்காவிலுள்ள ப்யூ ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் உலக மதங்களின் எதிர்காலம் என்ற விரிவான ஆய்வறிக்கையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

உலக அளவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களில் மக்கள் தொகைப் பெருக்க விகிதம் அதிகமாக இருப்பதும் இஸ்லாமியர்களில் 34 சதவீதம் பேர் 15 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதுமே இதற்குக் காரணம் என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்களும் இந்தியாவில்தான் வசிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. தற்போது இந்தோனேஷியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை வட இந்தியாவில்தான் மக்கள்தொகைப் பெருக்கம் அதிகம். இந்தியாவில் இஸ்லாமியர்கள் அதிகம் வட இந்தியப் பகுதியில்தான் வசிக்கிறார்கள் என்பதால், இதில் ஆச்சரியமடைய ஏதுமில்லை என்கிறார் சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியரான டாக்டர் ஜெயராஜ்.

2050 வாக்கில் ஐரோப்பாவில் இருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை இருமடங்காகியிருக்கும் என்றும், 2070ல் உலக அளவில் அவர்கள் கிறிஸ்தவர்களைவிட அதிகமாக இருப்பார்கள் என்றும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவுகள் நிகழ்வதற்கே வாய்ப்பு இருக்கிறது என்றாலும், இது இயல்பான மாற்றம்தான் என்கிறார் ஜெயராஜ். உலகில், ஒவ்வொரு மதத்திலும் தற்போது இருப்பவர்களின் எண்ணிக்கை, எந்தெந்தப் பகுதிகளில் வசிக்கிறார்கள், அவர்களுடைய வயது, பிறப்பு விகிதம், இறப்பு விகிதம், சர்வதேச அளவில் இடம்பெயர்தல், மதமாற்றம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு இந்த ஆய்வு செய்யப்பட்டிருப்பதாக ப்யூ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

(Visited 14 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)