மனித மூளை ஓர் ஆச்சரியம்!

மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மூளை நாம் பார்க்கும், கேட்கும்,உணரும் செயல்களை நினைவகத்தில் சேமித்து கொள்கிறது. இதனை எவ்வாறு நம் நினைவகத்தில் சேமிக்கப்படுகிறது என்பது மிக ஆச்சரியமான விஷயம். முதலில் பதிய வைத்தல்,பதியவைத்தலின் வகைகள்,மீண்டும் நினைவு கூர்தல். இதை கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.

1.பதிய வைத்தல்(Recording)secrets of brain

இதுவே நிகல்வுகளை நமது நினைவகத்தில் சேமித்தலில் முதல் செயல் ஆகும்.அதாவது, நமது புலன்களான கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல் ஆகியவை நமது சுற்றுபுறத்திலிருந்து தகவல்களை சேகரித்து மூளைக்கு அனுப்புகின்றன.(உ.ம்: நமது கண் ஒரு நபரை முதல் முறையாக காணும் பொழுது அவரின் நிறம்,உருவம் ,உயரம்) போன்ற தகவல்களை மூளைக்கு அனுப்பும்.இந்த தகவல்கள் நமது மூளையில் நியூரோன்கள் (neurons) எனும் நரம்பு செல்கள் வழியாக கடத்தப்படும்.இந்த தகவல்கள் ஒரு நரம்பு செல்லில் (neuron) இருந்து மற்றொரு நரம்பு செல் வழியாக பாயும்.அதாவது இரு செல்களின் இடைவெளியை கடக்கும் பொழுது ஒரு வகை வேதியல் (neurotransmitter) மூலக்கூறு வெளிபட்டு இரு நரம்பு செல்களிடையே ஒரு இணைப்பை ஏற்படுத்தும்.இந்த இணைப்பிற்கு சினப்ஸ்(synapse) என்று பெயர். இந்த இணைப்பு உறுதியாகும் பொழுது அந்த நபரை பற்றிய நினைவு உங்கள் மூளையிலிருந்து அகலாது.இந்த இணைப்பு உறுதியாவது ஒரு முறை பார்த்தவுடன் நிகழ்ந்துவிடாது.ஒருநபரை மீண்டும் மீண்டும் பார்க்கும் பொழுது அவரை பற்றிய தகவல் நாம் நரம்பு செல்களில் உறுதியான இணைப்பாக (synapse) பதிய வைக்கப்படும். இந்த இணைப்பு எந்த அளவுக்கு உறுதி ஆகிறதோ அந்த அளவுக்கு அந்த நபரை பற்றிய நினைவையும் நாம் மறக்காமல் இருப்போம்.

இது அனைத்து விதமான நினைவுகளுக்கும் பொருந்தும். ஒவ்வொரு நினவுகளுக்கும் ஒரு தனி இணைப்பு(synapse) நம் மூளையில் உருவாகும்.இவ்வாறு தான் நாம் படிக்கும் பாடம் , கேட்கும் விஷயம், பார்க்கும் படம் அனைத்துமே நாம் மூளையில் பதிய வைக்கப்படும். மீண்டும் மீண்டும் படிப்பதன் மூலம் நாம் படித்த பாடமானது ஒரு உறுதியான நரம்பு செல் இணைப்பாக மாறி மறக்காமல் இருக்கிறது

2.நினைவகளின் வகைகள்:

இவை மூன்று வகைபடும் ,

1.சென்சரி

2.ஷார்ட் டைம் மெமோரி

3. லாங் டைம்.

சென்சரி நினைவுகள் மிக சொற்ப வினாடிகளே நினைவில் இருக்கும்.உ.ம். நாம் முதல் முறை கேட்கும் ஒருவரின் குரல் நமக்கு நினைவில் தாங்காது.

ஷார்ட் டைம் மெமோரி எனும் இரண்டாம் வகை நினைவுகள் 30 வினாடிகள் வரை நினவில் இருக்கும். உ.ம். ஒருவரின் தொலைபேசி என்னை முதல் முறை கேட்கும் போது அந்த எண் உடனேயே எழுதி வைக்காவிடில் மறந்துவிடும்.

லாங் டெர்ம் மெமோரி எனும் நீண்ட கால நினைவுகள் நாம் மூளை நன்றாக செயல்படும் வரை நமக்கு மறக்காது.அகற்கு நாம் செய்ய வேண்டிய ஒன்று அந்த நிகழ்வுகளை நமக்குள் நினைவுபடித்திக் கொண்டே இருப்பது.உம்..உங்களில் பலருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வந்து அந்த முதல் காதல் இன்னும் நினைவிருக்கும். இகற்கு காரணம் நீங்கள் ஒவொரு முறை உங்கள் காதலி பற்றி நினைக்கும் போதும் உங்கள் மூளையில் காதல் பற்றிய இணைப்பு(synapse) உறுதி ஆகும். நீங்கள் ஏதாவது ஒரு நினைவை பற்றி நினைவு கூறாத போதும், நினைக்காத போதும் உங்கள் மூளையில் அந்த விஷயட்திற்கான பிரேத்யேக இணைப்பு விடுபடத் தொடங்கும்.இதனால் தான் மறதி ஏற்படுகிறது.

3.தகவல்களை நினைவுகூறுதல்.

நாம் ஒரு தகவலை நாம் மூளையிலிருந்து நினைவுகூரும் போது அந்த தகவலானது இந்த synapse எனும் நரம்பு செல்களின் இணைப்பு வழியாக தான் ஞாபகத்திற்கு திரும்பி நினைவுகூறுகிறோம். முன்பே கூறியதை போல இந்த இணைப்பு விடுபடும் போது ஞாபகபடுதுதல் சிரமமாகும்.இதுவே மறதியின் காரணம்.

இந்த மறதியை தவிர்க்க நாம் மூளையில் சேகரிக்கும் தகவல்களை ஆழமாக பதிய வைக்க வேண்டும். அதாவது பாடம் கேட்கும் பொது அதை கவனமாக கேட்டு மூளையில் பதிய வைக்க வேண்டும். மேலும் அந்த தகவல்களை நமக்குள் சொல்லி பார்த்து கொள்வதால் அந்த தகவலுக்கான இணைப்பு நாம் நரம்பு செல்களில் உறுதியாகி நமக்கு எளிதில் ஞாபகத்தில் இருக்கும்.

முதுமையும் மறதியும்:

மனித மூளையானது சுமாராக 100 பில்லியன்(100 * 100 கோடி) நரம்பு செல்களை (நியூரான்ஸ்) கொண்டது. நமக்கு 3 வயது ஆகும்போது தான் அந்த செல்கள் முழு வளர்ச்சி அடையும்.இதனால் தான் நமக்கு 3 வயதிற்கு முந்தய ஞாபகங்களை நினைவு படுத்த முடியவில்லை.3 வயதில் தான் நாம் அதிக எண்ணிகயிலான நரம்பு செல்களை கொண்டிருக்கிறோம். நாம் இருபது வயதுகளை கடக்கும் போது நமது மூளையில் உள்ள இந்த நரம்பு செல்கள் குறைய தொடங்கி நாம் எண்பது வயதை எட்டும் போதூ சுமாராக இருபது சதவீத நரம்பு செல்களை இழந்திருபோம்.மறதிக்கு இது ஒரு காரணம் என்று கூறலாம்.

இருப்பினும் நாம் மீதமுள்ள நரம்பு செல்களை கூட நமது வாழ்நாளில் முழுவதுமாக பயன்படுதுவது இல்லை.இந்த இருபது சதவீத செல்களின் இழப்பு ஒரு குறை ஆகாது. நம்மில் பலர் முதுமை வந்த பிறகு நமது நடவடிக்கைகளை குறைத்து கொள்கிறோம்.நமது சிந்தனையையும் குறைத்து கொள்கிறோம்.இதனால் நாம் நினைவு கூறாத விஷயங்களுக்கு உரிய இணைப்புகள் நம் மூளை செல்களில் விடுபடுகின்றன. இதுவே மறதிக்கு முக்கிய காரணம். நம் முதுமையிலும் நம் மூளைக்கு சவாலான செயல்களை கொடுத்து கொண்டே இருந்தால் நம் மூளை முதுமையிலும் இளமையாக செயல்படும்.

 

 

(Visited 556 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)