சரோஜினி நாயுடு இந்தியாவின் நைட்டிங்கேல்

சரோஜினி நாயுடு

சரோஜி சட்டோபாத்யாயாவாக வங்காள பிராமண குடும்பத்தில் மூத்த மகளாக, ஐதராபாத் சமஸ்தானத்தில் பிறந்து தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்ட டாக்டரை மணந்ததால் சரோஜினி நாயுடுவாக அறியப்பட்டவர். இவர் 1879ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி பிறந்தார். இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்பட்ட இவர் சுதந்திர போராட்ட வீராங்கனை மட்டுமல்ல ஒரு சிறந்த கவிஞரும் ஆவார்.

அதோடு போராட்டக்களத்தில் இருந்த இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும் இவரே. மேலும், சுதந்திர இந்தியாவில் அமைந்த உத்தரபிரதேச மாநில முதல் பெண் கவர்னராகவும் தடம் பதித்தவர். இத்தகைய அவரது பிறந்த நாளே இந்தியாவின் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இவரது தந்தை விஞ்ஞானியாகவும், தத்துவஞானியாகவும், கல்வியாளராகவும் விளங்கிய அகோர்நாத் சடோபாத்யாயா. இவரது தாய் பரத சுந்தரி ஒரு பெண் கவிஞர். இவரது தந்தை நிசாம் கல்லூரியின் நிறுவனர்.Sarojini_Naidu_in_Bombay_1946

மேலும் இவரது நண்பர் முல்லா அப்துல்காமுடன் இந்திய தேசிய காங்கிரசின் முதல் உறுப்பினராக விளங்கினார். அவர் பின்னர் அரசியலில் ஈடுபட்டதற்காக அவரது தலைமை ஆசிரியர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். சரோஜினி நாயுடு தனது 12வது வயதில் மெட்ரிகுலேஷன் பரீட்சையில் சென்னை பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்றார். அவர் மாநில அளவில் முதலிடம் பெற்றார். 1891 முதல் 1894 வரை அவர் தன்னுடைய படிப்பில் சிறு இடைவெளி விட்டு, புத்தகங்களை படிப்பதில் செலவிட்டார்.

1895ம் ஆண்டு தனது 16வது வயதில், முதன் முதலாக லண்டன் கிங்ஸ் கல்லூரி மற்றும் கேம்பிரிட்ஜ் கிர்டன் கல்லூரியில் படிப்பதற்காக சென்றார். தாய் மொழி பெங்காலியுடன் உருது, தெலுங்கு, ஆங்கிலம், பாரசீக மொழிகளையும் கற்றுத்தேர்ந்தார். 1905ல் வங்காளம் பிரிக்கப்பட்டதை கண்டு கொதித்தெழுந்து முதன்முதலில் அரசியல் களத்தில் கால் பதித்தார். இக்காலக்கட்டத்தில் கோகலே, ரவீந்திரநாத் தாகூர், முகமதுஅலிஜின்னா, அன்னி பெசன்ட், சி.பி.ராமசுவாமி ஐயர், காந்தி, நேரு ஆகியோரின் நட்பை பெற்றார்.

அப்போது, 1915 தொடங்கி மூன்றாண்டு காலம் நாடு முழுவதும் இளைஞர் நலன், பெண்ணுரிமை, நாட்டு விடுதலை தொடர்பான பல்வேறு கூட்டங்களில் பங்கேற்று பேசினார். 1916ல் சம்ப்ரான் தொழிலாளர் பிரச்னையில் தலையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். அதை தொடர்ந்து 1925ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் முதல் பெண் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டார். 1919ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் இயற்றிய ரவுலட் சட்டத்தை எதிர்த்து காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். அதே ஆண்டு இங்கிலாந்தில் தோன்றிய ஹோம்ரூல் இயக்கத்தின் தூதராக தேர்வு செய்யப்பட்டார். 1924ல், கிழக்கு ஆப்பிரிக்க இந்திய காங்கிரசில் பங்கேற்ற இரண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர்களுள் சரோஜினிநாயுடுவும் ஒருவர்.

ஜனவரி 26, 1930 ஜனவரி 26ம் தேதி கூடிய காங்கிரஸ் மாநாடு முழுமையான விடுதலையை வேண்டி தீர்மானம் நிறைவேற்றியது. தொடர்ந்து மே 5ல் போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியுடன், சரோஜினி நாயுடுவும் கைது செய்யப்பட்டார். 1931 ஜனவரி 31ம் தேதி காந்தியுடனேயே விடுதலையும் செய்யப்பட்டார். அந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டனர். அப்போது சரோஜினி நாயுடுவின் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டதால் உடனடியாக விடுவிக்கப்பட்டார். அதே ஆண்டில் லண்டனில் நடந்த வட்டமேசை மாநாட்டில் காந்தி, மதன்மோகன்மாளவியா ஆகியோருடன் சரோஜினி நாயுடுவும் பங்கேற்றார்.Mahatma &Sarojini Naidu_1930

தொடர்ந்து 1942 வெள்ளையனே வெளியேறு உட்பட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார். இவரை காந்தியடிகள் செல்லமாக ஆங்கிலத்தில் மிக்கி மவுஸ் என்று அழைத்தார். நாடு சுதந்திரம் பெற்றதும், அப்போதைய ஐக்கிய மாகாண முதல் கவர்னராக பொறுப்பேற்றார். கவர்னராக பொறுப்பில் இருந்த போதே 1949 மார்ச் 2ல் அவர் காலமானார். 17 வயதில் சரோஜினி சட்டோபாத்யாயாவாக இருந்த போது, ஆந்திரத்தின் டாக்டர் முத்தியாலா கோவிந்தராஜூலுநாயுடுவை காதல் மணம் புரிந்து சரோஜினி நாயுடுவாக பரிணமித்தார்.

இந்த தம்பதிகளுக்கு ஜெயசூர்யா, பத்மஜா, ரந்தீர், லீலாமணி என நான்கு குழந்தைகள் பிறந்தனர். பின்னர் அவரது மகள் பத்மஜா மேற்கு வங்க ஆளுனர் ஆனார். சரோஜினி நாயுடு கவிதை துறைக்காக பல பாராட்டுகளை பெற்றவர். இவரது கவிதைகளில் அழகான வார்த்தைகள் இருக்கும். அதன் காரணமாக அதை பாடவும் முடியும். இதற்காகவே அவர் கவிக்குயில் என்று அழைக்கப்பட்டார்.

(Visited 348 times, 1 visits today)

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)