அதிக மதிப்பெண் பெற்ற மாணவ–மாணவிகளுக்கு கல்வி நிதி உதவி: திருவாரூர் கலெக்டர் தகவல்

திருவாரூர்–

திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

திருவாரூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று 10–ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் வகுப்பைச் சார்ந்த 3 மாணவர்கள், 3 மாணவியர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த 2 மாணவர்கள் 2 மாணவிகள் என மொத்தம் 10 மாணவ-மாணவியரைத் தேர்வு செய்து அவர்கள் விரும்புகின்ற தமிழகத்திலுள்ள தலைசிறந்த தனியார் பள்ளிகளில் 11–ம் வகுப்பில் சேர்ந்து மேல்நிலைக்கல்வி பெற ஏதுவாக அரசால் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் உதவிபெற விரும்பும் மாணவ, மாணவியரின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு உயர்ந்த பட்சமாக ஆண்டொன்றிற்கு ரூ.28 ஆயிரம் மிகாமல் 2 ஆண்டுகளுக்கு ரூ.56 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

கல்விக் கட்டணமாக ரூ.8 ஆயிரமும், பராமரிப்புக் கட்டணமாக ரூ.3 ஆயிரத்து 650–ம், விடுதி கட்டணமாக ரூ.15 ஆயிரமும் (விடுதியில் சேர்ந்து படிப்பவர்களுக்கு மட்டும்) சிறப்பு பயிற்சிக் கட்டணம் ரூ.1500–ம் என மொத்தம் ரூ.28 ஆயிரத்து 150 வழங்கப்படுகிறது.

தகுதியுடைய மாணவ–மாணவியர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

(Visited 38 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)