ஜக்காத் மற்றும் சதக்காவை அமானுக்கு அளித்து உதவிடுங்கள்!

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

அன்பு நிறைந்த அடியற்கை சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

 

அல்லாஹ்வின்  மாபெரும் கிருபையால் 2008ஆம்   வருடம் பிப்ரவரி மாதம் ஐக்கிய அரபு  அமீரகத்தில் வாழும் அடியக்கமங்கலம்   முஸ்லிம் சகோதரர்கள் அனைவரும்  ஒன்றுபட்டு ஒருங்கிணைந்து உருவாக்கிய   அமைப்புதான் இந்த அமான் என்ற சுருக்கமான பெயருடன் அமையப்பெற்ற   அடியக்கமங்கலம் முஸ்லிம் அசோசியேஷன்.

 

அடியக்கமங்கலத்தில் வாழும் இஸ்லாமிய   சமுதாயத்தில் ஏழ்மை நிலையால் கல்வியை தொடர முடியாத நிலையிலுள்ள ஏழை   மாணவர்களுக்கு கல்வியின்  அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி   அவர்களை கல்வி கற்க தூண்டுவதும்  அதற்கு உதவுவதும், நலிவடைந்தவர்களுக்கு   மருத்துவ சிகிச்சைக்கு  முடிந்தளவு பொருளாதார உதவிகள் செய்வதும்தான் அமானின் முக்கிய நோக்கம். மேலும் இத்துடன் பென்சன், பைதுல் மால் மற்றும் அமான் டியூஷன் போன்ற சமுதாய பணிகளையும் அமான் ஆற்றிவருகிறது.

 

அமான், எந்த ஒரு அரசியல்   கட்சியையோ எந்த ஒரு சமுதாய  அமைப்பையோ அல்லது தமிழகத்தில் இயங்கி வரும்   எந்த ஒரு கொள்கை அமைப்பையும் அந்த  அமைப்புகளின் கொள்கைகளையும் சாராத ஒரு   அமைப்பாகும். அமானுடைய பணிகளை அங்கீகரித்து, நமதூரிலிருந்து மனுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. கல்வி, மருத்துவம் மற்றும் பிற உதவிக்களுக்காக நமது அமானுடைய பெயர் மக்கள் மனதில் தெரிகிறது. அதனை பூர்த்தி செய்வது நம் அனைவரின் பொறுப்பாகும்.

 

ஜக்காத் மற்றும் சதக்காவை அமானுக்கு அளித்து உதவிடுங்கள்

AMANZaqt_1

மேலும் நம்மை நோக்கி நோன்பு வெகு வேகமாக வந்துகொண்டிருக்கிறது, நீங்களும் உங்களை சுற்றியுள்ளவர்களையும் ஆயத்தப்படுத்துங்கள். இன்ஷா அல்லாஹ், இந்த வருடமும் நமதூர் மக்களுக்கு உதவிகளை அமான் மேலும் சிறப்பாக தொடர உங்களுடைய சந்தா மற்றும் ஜக்காத் தொகையை தயவு செய்து அமானுக்கு கொடுத்து (அமானுடைய வங்கி விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது) நமதூர் மக்களின் கஷ்டத்தை போக்கிடும் நமது கொள்கைகளுக்கு உறுதுணையாய் இருங்கள். நீங்கள் தயவு செய்து நம்மூர் மக்களின் கஷ்டங்களை மனதில் கொண்டு, அல்லாஹ்வின் பொருட்டு உங்களால் முடிந்த உதவிகளை செய்திடுங்கள். அல்லாஹ் நீங்கள் அளிக்கும் உதவிகளுக்கு, ஈருலகிலும் நற்கூலி வழங்கிடுவானாக. ஆமீன்.

 

நீங்கள் கொடுத்து உதவிடும் ஜக்காத் மற்றும் சதக்கா பொருட்டு, உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார்கள் மீதும் அல்லாஹ் கருணையை இறக்கி, மேலும் பரகத் செய்வானாக! ஆமின்!!

 

– அமான் நிர்வாகிகள்

www.amanaym.org

amanaym@gmail.com

அல்லாஹ்வின் உதவியால், இந்த வருடம் நமதூர் மக்களுக்கு கீழ்க்கண்ட உதவிகளை அமான் புரிந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

AMANZaqt_2

 

(Visited 70 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)