பெங்களூரு முழுவதும் வைஃபை தொழில்நுட்ப வசதி

Filed in செய்திகள் by on September 28, 2014 0 Comments

விரைவில் பெங்களூரு முழுவதும் வைஃபை தொழில்நுட்ப வசதி செய்து தரப்படும் என்று கர்நாடக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல் தெரிவித்தார்.

பெங்களூரு குயின்ஸ்சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: பெங்களூருவில் சோதனை முயற்சியாக எம்.ஜி.சாலையில் வைஃபை தொழில்நுட்ப வசதி தொடங்கப்பட்டுள்ளது. என்றாலும் சில தொழில்நுட்ப கோளாறால் அதனை தொடந்து வழங்க முடியாமல் போகிறது. எனவே விரைவில் தொழில்நுட்ப பிரச்னைகளை களைந்து, சீர்செய்யப்பட்டு பெங்களூரு முழுவதும் இலவச வைஃபை வசதி செய்து தரப்படும். இந்த வசதியைச் செய்துத்தர 4 தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும். இந்த முயற்சி வெற்றி பெற்றால் வைஃபை வசதி மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் தொடங்கும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.

மேலும் மங்களூர் அருகே மண்டல அறிவியல் மையம் அக். 1-ஆம் தேதி முதல்வர் சித்தராமையா தொடக்கி வைக்க உள்ளார். இதே போன்ற மையங்கள் பாகல்கோட்டை, மைசூர் நகரங்களில் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் மாநில அரசின் நிதி உதவியுடன் அறிவியல் துணை மையங்கள் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தலா. ரூ. 3.5 கோடி ஒதுக்கப்படும். மங்களூரில் உள்ள 3டி கோளரங்கத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார் அவர்.

(Visited 19 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)