மாநில அளவில் 3-வது இடம்: திருவாரூர் பள்ளி

Filed in செய்திகள் by on May 27, 2015 1 Comment

திருவாரூர் ஆர்.சி. பாத்திமா மெட்ரிக் பள்ளி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.

பள்ளி மாணவி ஜெ.சீதளபிரியா 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 3-வது இடத்தையும், பள்ளி அளவில் முதல் இடத் தையும் பிடித்தார்.

எஸ்.ரேணுகா, எஸ்.சமீரா கோலி ஆகியோர் 496 மதிப்பெண் பெற்று 2-வது இடத்தையும், எம்.ஜெயஸ்ரீ 495 மதிப்பெண் பெற்று 3-வது இடத்தையும் பெற்றனர். பள்ளியில் 34 பேர் 475-க்கு மேல், 24 பேர் 450-க்கு மேல், 31 பேர் 400-க்கு மேல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர். கணித பாடத்தில் 12 பேரும், அறிவியலில் 17 பேரும், சமூக அறிவியலில் 7 பேரும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.

fathimaSchool

 

மாநில அளவில் 3-வது இடம் பிடித்த திருவாரூர் ஆர்.சி. பாத்திமா பள்ளி மாணவி சீதளபிரியா மற்றும் வெற்றி பெற்ற மாண விகளை திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன், பள்ளி தாளாளர் ஜோஸ்பின்மேரி, முதல்வர் ஸ்டெல்லாமேரி, பள்ளி நிர்வாக தஞ்சை மண்டல கல்வி ஒருங்கிணைப் பாளர் லூர்துமேரி ஆகியோர் பாராட்டினர்.

(Visited 48 times, 1 visits today)

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. SingaiAnban says:

    இதில் நமது அமான் செயலாளர் ஜபீன்..Jafin.. கஸின் மகள் மூன்றாம்.. இடம்…496 மார்க்ஸ்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)