திருவாரூரில் நடந்த சிறு பான்மையினர் உரிமை கள் தின விழா!

Filed in செய்திகள் by on December 21, 2015 0 Comments

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் ரூ.6¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் மதிவாணன் வழங்கினார்

திருவாரூரில் நடந்த சிறு பான்மையினர் உரிமை கள் தின விழாவில் ரூ.6 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மதிவாணன் வழங்கினார்.

Minority-Rights-Day-ceremony-Rs-6-million-welfare-payments_SECVPF_gif

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா

திருவாரூர் மாவட்ட கலெக் டர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில் சிறு பான்மையினர் உரிமைகள் தின விழா நேற்றுமுன்தினம் நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மதிவாணன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-

தமிழக அரசு சிறு பான்மை யினருக்காக பல்வேறு வகை யான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் சிறு பான்மையினர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மேற்படிப்பு வரையில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ- மாணவி களுக்கு பரிசு தொகை வழங்கு தல், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரி யத்தில் பதிவு செய்யப்படும் உறுப்பினர்களுக்கும், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கு தல் போன்ற திட்டங்கள் பலரை பயன் அடைய செய்து உள்ளன. அரசின் இதுபோன்ற நலத்திட்டங்களை சிறு பான்மையினர் நல்லமுறை யில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறி னார்.

ரூ.6¾ லட்சத்தில்…

அதைதொடர்ந்து நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மன்னார்குடி நகர கூட்டுறவு வங்கி மூலம் 6 பேருக்கு சுய தொழில் தொடங்குவதற்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் சுய தொழில் தொடங்குவதற்கு ரூ.50 ஆயிரம், ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் சிறு பான்மையினர் சுய உதவி குழுவிற்கு கடன் தொகையாக ரூ.2 லட்சம், பல்பொருள் அங்காடி அமைப்பதற்கு ரூ.3 லட்சத்து 8 ஆயிரம் என மொத்தம் ரூ.6 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் மயில் வாகணன், ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட மேலாளர் ஸ்ரீலேகா, மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அதிகாரி பத்மாவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

-தினத்தந்தி

(Visited 34 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)