22 வயது கார் தொழிலாளியை கொன்ற ரோபோ

Filed in செய்திகள் by on July 6, 2015 0 Comments

22 வயது தொழிலாளி ஒருவர் ஒரு ரோபோவின் கையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனி, பிராங்பேர்ட் வடக்கில் உள்ள வோக்ஸ்வாகன் கார் தொழிற்சாலையில் தானியங்கி இயந்திரங்கள் வேலை செய்யும் பகுதியில் வேலை செய்யும் ஒரு ரோபோதான் இந்த 22 வயது கார் தொழிலாளியை கொன்ற ரோபோ.

தொழிலாளி அதனுடைய இயந்திர கையில் சிக்கி உலோகத்தகடின் மீது அழுத்தப்பட்டு அதனால் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் உயிரிழிக்க நேர்ந்தது. அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் ஆனால் மருத்துவர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை.

இந்த தானியங்கி பகுதி முழுதும் ரோபோவின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. ஆனால் இந்த சம்பவம் நடைபெறும்போது மனித கட்டுப்பாட்டில் இருந்து வந்ததாக தெரிகிறது. Heiko Hillwig, நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இதுபற்றி கூறும்போது அது ஒரு மனிததிறன் இன்றி செயல்படும் ஒரு தானியங்கி பகுதியாக உள்ளது, ஆனால் அது விபத்து நடந்த நேரத்தில் மனிதகட்டுப்பாட்டின் கீழ் இருந்து இருக்கலாம். மேலும்வழக்கு போலீஸ் விசாரணையின் கீழ் இருப்பதால் இப்போது அவர் எந்த மேல் விவரங்களும் வழங்க முடியவில்லை என்றார்.

ஆரம்ப அறிக்கைகள் மனித பிழையே இதன் காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறினார்.

Kassel,அரசாங்க வக்கீல், காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று கூறினார்.

Dr.Götz Wied, செய்தித் தொடர்பாளர் ,”நாங்கள் சரியாக என்ன நடந்தது, யாருடைய தவறு என்று கண்டுபிடிக்க விசாரணையை தொடங்கப்பட்டுள்ளது”என்று  கூறினார்.

ஆனால் ஒப்பந்ததாரர், அவருடைய தொழிலாளியின் மார்பு ரோபோவின்  கை நசுக்கப்பட்ட போது ஏற்பட்ட காயங்களால்தான் அவர்  உயிரிழந்தார் என்று  நம்புவதாக கூறினார்.

 

(Visited 31 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)