திருவாரூர் மாவட்டத்தில் பலத்த மழை திருத்துறைப்பூண்டியில் அதிகபட்சமாக 93 மில்லி மீட்டர் பதிவானது

Filed in செய்திகள் by on May 18, 2015 0 Comments

திருவாரூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. திருத் துறைப்பூண்டியில் அதிகபட்சமாக 93 மில்லி மீட்டர் பதிவானது.

வெயிலை மிஞ்சிய மழை

முன்னதாக திருவாரூர் மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்தது. ஆனால் வெயிலை மிஞ்சும் விதமாக மழை பெய்ய தொடங்கியது. மாவட்டம் முழுவதும் கடந்த 2 வாரங் களாக மழை காலம் போல் பர வலாக மழை பெய்து வருகிறது. கடந்த 4-ந் தேதி முதல் விட்டு, விட்டு பெய்து வந்த மழை கடந்த 3 நாட்களாக தீவிரமாக பெய்தது. நேற்று திருவாரூரில் அதி காலையில் இருந்தே மழை பெய்ய தொடங்கி விட்டது. இந்த மழை மாலை வரை கொட்டி தீர்த்தது. திருத்துறைப் பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் நேற்றுமுன்தினம் இரவு 11 மணி அளவில் பெய்ய தொடங்கியது. இப்பகுதிகளில் நேற்று மதியம் வரை மழை பெய்தது. இதேபோல் குட வாசல், நன்னிலம், நீடாமங் கலம் பகுதிகளிலும் நேற்று பர வலாக பலத்த மழை காணப்பட்டது.

மழை நிலவரம்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8½ மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் திருத்துறைப் பூண்டியில் அதிகபட்சமாக 93 மில்லி மீட்டர் மழை பதிவா னது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டர் அளவுகளில் வருமாறு:-

முத்துப்பேட்டை-41, குடவாசல்-34, நன்னிலம்-14, திருவாரூர்-8, பாண்டவை யாறு தலைப்பு-7, நீடாமங்க லம்-4, வலங்கைமான்-4.

மாவட்டம் முழுவதும் சராசரியாக 23 மில்லி மீட்டர் மழை பதிவானது குறிப்பிடத் தக்கது.

பயிர்கள் பாதிப்பு

கோடை காலத்தில் தொடர்ந்து நீடித்து பெய்யும் மழை வெயிலின் தாக்கத்தை தணித்து மகிழ்ச்சியை தந்தா லும் பருத்தி, பயறு போன்ற கோடை கால பயிர்களை சாகுபடி செய்த விவசாயிகளை கலக்கம் அடைய செய்து இருக்கிறது.RainTVR

(Visited 25 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)