நேபாள நிலநடுக்கத்தில் 2250 பலி, 5500 பேர் படுகாயம்: 66 லட்சம் மக்கள் பாதிப்பு- ஐ.நா. மதிப்பீடு

Filed in செய்திகள் by on April 26, 2015 0 Comments

காத்மாண்டு, ஏப்.26-
NepalEq_1NepalEq_3

நேபாளத்தில் நேற்றைய நில நடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 250 ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்த கோரப் பேரழிவினால் 5500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 66 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை இன்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, காத்மாண்டுவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நேபாளத்துக்கான ஐக்கிய நாடுகள் சபை ஒருங்கிணைப்பாளர் ஜேமி மெக்கோல்ட்ரிக், இந்த கொடூரமான பேரழிவில் இருந்து மக்களை காப்பாற்றும் மீட்புப் பணிகளில் நேபாள அரசுக்கு நாங்கள் உதவிகரமாக இருப்போம்.

மீட்புப் பணிகளை விரைவாகவும், வெற்றிகரமாக நிறைவேற்றிட வேண்டியது மிகவும் அவசியம். மேலும் உயிர்கள் பலியாகாமல் பாதுகாக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை உடனடியாக வழங்கிட முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

நேபாளத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாக மிகவும் வலுவான நில நடுக்கம் ஏற்பட்டது.

NepalEq_2

நேபாளத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாக மிகவும் வலுவான நில நடுக்கம் ஏற்பட்டது. நேற்று சனிக்கிழமை நேபாளத்தை தாக்கிய மோசமான நிலநடுக்கத்தில் சுமார் 2000 பேர் வரை பலியான பின்னணியில் இன்றும் அங்கே நிலநடுக்கம் தொடர்கிறது.

சனிக்கிழமை நேபாளத்தை தாக்கிய நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோசமானதொரு தொடர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.7 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

இதனால் தலைநகர் காட்மண்டுவிலும் நாட்டின் மற்ற பகுதிகளிலும் கட்டிடங்கள் மோசமாக அசைந்து, அல்லாடி, அதிர்ந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அச்சத்தில் பொதுமக்கள் கட்டிடங்களைவிட்டு வெளியேறி மைதானங்களை நோக்கி ஓடினர்.

நேபாளத்தில் மட்டுமல்லாமல், வட இந்தியா, வங்கதேசத்திலும் இன்றைய நிலநடுக்கம் உணரப்பட்டதோடு, எவெரெஸ்ட் பிராந்தியத்தில் புதிதாக பனிச்சரிவுகளையும் தோற்றுவித்திருக்கிறது.

அண்டைநாடுகளில் இருந்து நிவாரணப்பொருட்கள், மருத்துவர்கள், மீட்பு மற்றும் நிவாரணப் பணியாளர்கள் பலரும் விமானங்கள் மூலம் நேபாளத்தில் வந்து இறங்கியபடி இருக்கிறார்கள்.

இந்தியா மற்றும் சீனாவின் தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளுக்கான விமானங்களும் காத்மண்டுவிற்கு வந்து சேர்ந்துள்ளன.

அடுத்த சிலநாட்களுக்கு நேபாளத்தில் மோசமான காலநிலையும் தொடர் மழையும் நிலவும் என்பதால், அங்கே நடக்கும் தேடுதல் மற்றும் மீட்ப்புப்பணிகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

எவரெஸ்ட் மலையில் இன்றும் மேலதிக பனிச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.

NepalEq_4

ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாக நேபாளத்தில் தொடரும் நிலநடுக்கம் காரணமாக, எவரெஸ்ட் மலையில் இன்றும் மேலதிக பனிச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.

எவெரெஸ்ட் மலையேறிகள் தங்கும் அடிவார முகாமில் சிக்கியிருக்கும் நூற்றுக்கணக்கான மலையேறிகள் மத்தியில் இந்த பனிச்சரிவு மிகப்பெரிய பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை நடந்த நிலநடுக்கம் மற்றும் அதனால் உருவான பனிச்சரிவு காரணமாக புதிய பாதிப்புகள் அல்லது உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறதா என்பது குறித்து உடனடியாக தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

சனிக்கிழமை ஏற்பட்ட பனிப்பொழிவு காரணமாக 17 மலையேறிகள் எவெரெஸ்ட் மலைப்பகுதியில் கொல்லப்பட்டனர்.

எவரெஸ்ட் மலையடிவார முகாமில் மோசமாக காயமடைந்தவர்கள் அருகிலுள்ள கிராமத்துக்கு சிகிச்சைக்காக ஹெலிகாப்டர்கள் மூலம் கொண்டுசெல்லப்படுகிறார்கள்.

மலையடிவார முகாமுக்கு மேலே, மலைப்பகுதிகளில் சுமார் 100பேர் சிக்கியிருப்பதாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

(Visited 8 times, 1 visits today)

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)