ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே, சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்,  ஆண்ட்ராய்டு போன்களுக்கான “ஃபேஸ்புக் ஹோம்” என்ற மென்பொருளை வெளியிட்டுள்ளது.

இந்த மென்பொருளைப் பயன்படுத்தினால், ஆண்ட்ராய்டு ஃபோன்கள், ஃபேஸ்புக் இயக்க அமைப்பில் செயல்படும் போன்கள் போல மாறும். ஃபேஸ்புக் வலைத்தளத்தை மிக எளிமையாகக் கையாளவும் இந்த மென்பொருளில் வசதி செய்யப்பட்டுள்ளது. வரும் 12-ம் தேதி முதல் இந்த மென்பொருளை ஆண்ட்ராய்டு போன்களில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.

இதேபோல், புதிய இயங்குதளத்தில் செயல்படக்கூடிய ஸ்மார்ட் ஃபோன்களையும் ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியிருக்கிறது. எச்.டி.சி. நிறுவனத்துடன் இணைந்து இந்த ஸ்மார்ட்போன் சந்தைக்கு வர இருக்கிறது.

(Visited 21 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)