விமானத்தின் கடைசி நிமிடங்கள்… அலறிய பயணிகள், பதறாத துணை விமானி

Filed in செய்திகள் by on March 28, 2015 0 Comments

பாரீஸ்,

ஆல்ப்ஸ் மலையில் மோதி விமானத்தை விபத்துக்குள்ளாக்க வேண்டும் என்பது துணை விமானி ஆன்ட்ரூஸின் சதித்திட்டமாக இருந்திருக்கிறது.

அதற்கு வசதியாக விமானி, இயல்பாக கழிவறைக்கு சென்ற நேரத்தை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு விட்டார்.

கழிவறைக்கு சென்றிருந்த விமானி திரும்ப வந்து கதவைத் தட்டியபோது, துணை விமானி கதவை திறக்கவில்லை. ஏர்பஸ் விமானத்தில், அவசரமாக விமானி, விமானி அறைக்குள் போக வழி உண்டு. அதையும் துணை விமானி மூடி, விமானி உள்ளே வர முடியாதபடிக்கு தடை செய்திருக்கிறார்.

அடுத்த சில நொடிகளில்தான் துணை விமானி பொத்தானை அழுத்தி விமானத்தை கீழே கொண்டு வந்து மலை மீது மோத வைத்திருக்கிறார்.Lubitz, who crahed Flight

விமானம் விபத்துக்குள்ளாகப் போவதை உணர்ந்த பயணிகள், பதற்றத்தில் அலறி இருக்கிறார்கள்.

ஆனால் துணை விமானி பதற்றமின்றி அமைதியாக இருந்திருக்கிறார். அவரது சுவாசமும் சாதாரணமாக இருந்திருக்கிறது.

(Visited 9 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)