மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370-ஐ பார்த்தோம்…தீவுவாசிகள்

Filed in செய்திகள் by on April 6, 2015 0 Comments

‘மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370-ஐ பார்த்தோம்’ என்று இந்திய பெருங்கடலில் உள்ள குட்டித்தீவான குடஹூவாதூ தீவுவாசிகள் தெரிவித்து உள்ளனர்.

MH_370

மாயமான விமானம்

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8–ந்தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.எச்.370 போயிங் ரக விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் 5 இந்திய பயணிகளும் இருந்தனர்.

அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது. பின்னர் அந்த விமானம் என்னவானது, அதில் இருந்த பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது ஓராண்டாகி விட்ட நிலையிலும் உறுதியாக தெரியவரவில்லை.

சர்ச்சை

மாயமான விமானம் விபத்துக்கு உள்ளாகி விட்டதாகவும், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. எனினும் மாயமான விமானத்தை தேடும் பணி இன்னொரு பக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இதனால் அந்த விமானம் பற்றிய சர்ச்சை இன்னமும் ஓய்ந்தபாடில்லை. அனேகமாக மாயமான விமானத்தை ஒரு வருடங்களுக்கும் மேலாக தேடுவது வரலாற்றில் இதுதான் முதல் முறையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

விமானத்தை பார்த்தோம்

இந்நிலையில் ‘மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370-ஐ பார்த்தோம்’ என்று இந்திய பெருங்கடலில் உள்ள குட்டித்தீவான குடஹூவாதூ தீவுவாசிகள் தெரிவித்து உள்ளனர்.

மாலத்தீவு நாட்டின் குடஹூவாதூ தீவை சேர்ந்த மக்கள், விமானம் மாயமானதாக கூறப்படும் மார்ச் 8-ம் தேதி அதிகாலையில் விமானம் ஒன்று தாழ்வாக பறந்து சென்றதை பார்த்தோம். விமானமானது, மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் தொடர்பான புகைப்படங்களில் இருந்தப்படியே இருந்தது. விமானம் மிகவும் பெரியதாக காணப்பட்டது என்று கூறியதாக ஆஸ்திரேலியாவின் வாரநாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது.

வெள்ளை நிறத்திலான ஜம்போ செட் விமானம் மிகவும் தாழ்வாக வடக்கில் இருந்து தென்கிழக்காக சென்றது, விமானத்தில் சிவப்பு மற்றும் ஊதா நிறத்திலான மார்க் காணப்பட்டது என்றும் அவர்கள் தெரிவித்தனர் என்ற தகவல் மாலத்தீவு நாளிதழில் வெளியாகியது.

இதுதொடர்பாக தீவை சேர்ந்த அப்து ராஷீத் இப்ராகீம் ஆஸ்திரேலியா வாரநாளிதழக்கு பேட்டி அளித்து பேசுகையில், “விமானம் மாயமானது என்று எனக்கு தெரியாது. நான் வேகமாக வீட்டிற்கு சென்று எனது மனைவிடம் நடந்தை கூறினேன். மிகவும் புதுமையான விமானத்தை பார்த்ததாக எனது உறவினர்களிடம் தெரிவித்தேன். நான் இதற்கு முன்பாக பார்த்த விமானங்களைவிட இது மிகவும் பெரிய விமானமாக இருந்தது. நான் மாயமான விமானத்தின் புகைப்படத்தை பார்த்து உள்ளேன். நான் அந்த விமானத்தையே பார்த்து இருப்பேன் என்று நம்புகிறேன். விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் இங்கு வரவேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்று தெரிவித்து உள்ளார்.

சம்பவத்தை நேரில் பார்த்த மற்றொருவர் பேசுகையில், “எங்களுடைய தீவில் இவ்வளவு தாழ்வாக விமானம் பறந்தை நாங்கள் யாரும் இதுவரையில் பார்த்தது கிடையாது. நாங்கள் கடல் விமானங்களை பார்த்து இருக்கிறோம். இது அதுபோன்றது கிடையாது. விமானத்தின் கதவைகூட என்னால் தெளிவாக பார்க்க முடிந்தது. நான் மட்டுமின்றி தீவில் உள்ள அனைத்து மக்களுமே இதனை பார்த்தனர். அவர்களும் இதே எண்ணத்திலே உள்ளனர். பெரும் சத்தம் கேட்டது என்ன நடக்கிறது என்று பார்க்க வீட்டிற்குள் இருந்து பலரும் வெளியே வந்தனர்.” என்று கூறியுள்ளனர்.

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியானது ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து 2000 கிலோ மீட்டர் தொலைவில் விமானத்தை தேடும் பணிகள் நடைபெற்றது. மேலும் விமானத்தை தேடும் பணியில் பரப்பளவு விரிவுபடுத்தப்பட்டது. ஆனாலும் இதுவரையில் விமானம் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் விமானத்தை தேடும் அதிகாரிகள் தற்போது தேடும் இடத்தில் இருந்து வெளியே வந்து, அங்கிருந்து சுமார் 5000 கிலோ மீட்டர் தொலைவில் தேடும் பணியினை மேற்கொண்டால் கண்டுபிடிக்கலாம் என்று கிராமமக்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

இதற்கும் சாத்தியம் இருப்பதை மறுக்காத ஆஸ்திரேலியாவின் கார்டின் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், விமானம் விபத்துக்குள்ளானதாக கருதப்படும் வேளையில் விமானமானது இங்கு பயணித்து இருக்கலாம். குடஹூவாதூ தீவில் சத்தம் மிகவும் நெருக்மாக கேட்டபோது, விமானத்தில் எரிபொருளானது தீர்ந்து இருந்து இருக்கலாம் என்றும் தெரிவித்து உள்ளனர். இதற்கு மற்ற காரணமும் இருந்திருக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். தீவை சேர்ந்த அனைத்து மக்களும், தாங்கள் விமானத்தை பார்த்ததாக உறுதிப்பட தெரிவித்து உள்ளனர்.

 

(Visited 11 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)