பிரான்ஸ் விமான விபத்தில் சுற்றுலா சென்ற ஜெர்மனி பள்ளி குழந்தைகளும் பலி: உருக்கமான தகவல்

Filed in செய்திகள் by on March 25, 2015 0 Comments

பாரீஸ், மார்ச். 25–

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனியின் டசல்டோர்ப் நகருக்கு ஜெர்மன் விங்ஸ் நிறுவனத்தின் ஏர் பஸ் ஏ–320 ரக விமானம் நேற்று காலை 10.01 மணிக்கு புறப்பட்டு சென்றது. இது ஐரோப்பாவின் மிகப் பெரிய விமான நிறுவனமான லுப்தான்சாவின் துணை நிறுவனமாகும்.

இந்த விமானத்தில் 150 பேர் பயணம் செய்தனர். அவர்களில் 144 பேர் பயணிகள், 2 விமானிகள், 4 பணியாளர்களும் அடங்குவர். இந்த விமானம் காலை 11.40 மணிக்கு டசல்டோர்ப் நகரை சென்றடைய வேண்டும்.

ஆனால் 10.40 மணிக்கே ரேடாரில் இருந்து மறைந்து மாயமானது. இதற்கிடையே இந்த விமானம் பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலையில் பார்சிலோனட் நகருக்கு அருகே விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 150 பேரும் பலியாகினர். அதை தொடர்ந்து விமானத்தை தேடும் பணியில் பிரான்ஸ் ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டன.

ஹெலிகாப்டரில் சென்ற மீட்பு குழுவினர் ஆல்ப்ஸ் மலையில் விழுந்து நொறுங்கி கிடந்த விமானத்தின் சிதறல்களை கண்டுபிடித்தனர். அவற்றில் பெரும்பாலான பகுதிகள் தூள் தூளாக நொறுங்கி கிடக்கின்றன.

சிறிய கார் அளவில் மிகப்பெரிய ஒரு துண்டு மட்டும் பெரிதாக கிடக்கிறது. விபத்து நடந்த இடத்தில் யாரும் உயிருடன் இல்லை. விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் முக்கிய பாகமான கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதன் மூலம் விபத்து நடந்த போது FlightCrash25Marchவிமானத்தின் நிலை குறித்து விமானி பேசிய உரையாடலை அறிய முடியும். அதன் மூலம் விமானம் விபத்துக்குள்ளான தன்மையை அறிய முடியும்.

விபத்துக்குள்ளான விமானத்தில் 67 ஜெர்மனியர்கள் பயணம் செய்தனர். அவர்களில் 16 பள்ளி குழந்தைகளும், 2 ஓபெரா பாடகர்களும் அடங்குவர்.

பள்ளி குழந்தைகள் ஜெர்மனியின் ஹால்டர்ன் நகரை சேர்ந்தவர்கள். இவர்கள் அங்குள்ள உயர்நிலைப் பள்ளியில் படித்தனர். டீன்ஏஜ் பருவத்தினரான இவர்கள் 2 ஆசிரியர்களுடன் ஸ்பெயினுக்கு இன்ப சுற்றுலா சென்று இருந்தனர்.

சுற்றுலாவை முடித்துக் கொண்டு ஜெர்மனி திரும்பும் போது விபத்தில் பலியாகினர். இச்சம்பவம் அறிந்ததும் ஹால்டர்ன் நகரமே சோகத்தில் மூழ்கியது. அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

(Visited 12 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)