நேபாளத்தில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவு

Filed in செய்திகள் by on April 25, 2015 0 Comments
காத்மாண்டு,
150425090651_nepal_earthquake_640x360_afp 201504251255143574_75-magnitude-quake-hits-Nepal_SECVPF
நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின்  காரணமாக அங்குள்ள பல கட்டிடங்கள் இடிந்து சேதம் அடைந்துள்ளன. ஆனாலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. கட்டிடங்கள் பல இடங்களில் இடிந்து விழுந்துள்ளதால் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிர்சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
நேபாளத்தில் ஏற்பட்ட கடும் நிலம் நடுக்கத்தால் இந்தியாவிலும் லேசான நில அதிர்வு  உணரப்பட்டது. சுமார் 11.42 மணியளவில்  ஏற்பட்ட நிலநடுக்கம் 30 வினாடிகள் நீடித்தது. தலைநகர் டெல்லி, உத்தரபிரேதேசம், சிக்கிம், லக்னோ, பீகார்  உள்ளிட்ட வட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. டெல்லியில், இதன் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 என்ற அளவில் பதிவானது. நிலநடுக்கத்தால் டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் நிலநடுக்கத்தின் பின் அதிர்வுகள் உணரப்பட்டது.
(Visited 16 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)