நெல்சன் மண்டேலா 1918-2013

Filed in செய்திகள் by on December 8, 2013 0 Comments

நெல்சன் மண்டேலா

நெல்சன் மண்டேலா மரணமடைந்துவிட்டார்.அவருக்கு வயது 95.மண்டேலா அமைதியாக இறந்தார் என்று தற்போதைய தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமா கூறியிருக்கிறார்.மண்டேலா ஜோஹனஸ்பெர்க்கில் உள்ள அவரது இல்லத்தில் இறந்தார்.அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது இல்லத்தில் அவர் இறக்கும் தருவாயில் அருகில் இருந்தனர்.இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அவரது மகள் மகஸிவே மண்டேலா, நெல்சன் மண்டேலா அவரது மரணப்படுக்கையில் மிகவும் தைரியமான ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் என்று கூறியிருந்தார்.மண்டேலா மருத்துவமனையில் இருந்து செப்டம்பர் மாதம் வீடு திரும்பியதிலிருந்து ,அவரது இல்லத்திலேயே மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொண்டிருந்தார்.
கறுப்பின நாயகன், தென்னாப்ரிக்க விடுதலை வீரர், உலகத் தலைவர், நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கைக் குறிப்பு

1918 – கிழக்கு கேப்பில் பிறந்தார்

1943- ஆப்ரிக்க தேசிய காங்கிரஸில் சேர்ந்தார்

1956- தேசத் துரோகக் குற்றச்சாட்டு அவருக்கு எதிராகப் பதியப்பட்டது, ஆனால் நான்காண்டு விசாரணைக்குப் பிறகு குற்றச்சாட்டுகள் கைவிடப்படுகின்றன.

1962-கலவரத்தைத் தூண்டியது, பாஸ்போர்ட் இல்லாமல் நாட்டைவிட்டு வெளியேறியது ஆகிய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டு, ஐந்தாண்டு சிறைத் தண்டனை

1964- நாசவேலை குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறார்.

1990- சிறையிலிருந்து விடுதலை

1993– அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது

1994- தென்னாப்ரிக்காவின் முதல் கறுப்பின அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

1999- தென்னாப்ரிக்காவின் அதிபர் பதவியிலிருந்து விலகுகிறார்.

2001- ப்ரொஸ்டேட் புற்று நோய் பீடிக்கிறது.

2004- பொது வாழ்விலிருந்து விலகுகிறார்.

2005- தனது மகன் எச்.ஐ.வி. எய்ட்ஸ் நோய் தொடர்பான உடல்நலக்குறைவால் இறந்ததாக அறிவிக்கிறார்.

nelson mandela unity Nelson-Mandela-by-Eli-Weinberg-1961 Young-Mandela

(Visited 52 times, 1 visits today)

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)