ஜெர்மன்விங்ஸ் விமானம் விபத்து : பயணித்த 148 பேரும் பலி!

Filed in செய்திகள் by on March 25, 2015 0 Comments

பிரான்ஸ்: பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடரில், 148 பேருடன் பறந்த ‘ஏ320′ ஜெர்மனி நாட்டின் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில்  148 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமான ஊழியர்கள், பயணிகள் அனைவருமே உயிரிழந்திருப்பார்கள் என்று அஞ்சுவதாக பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஹாலண்டே தெரிவித்தார்.

ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரிலிருந்து ஏர்பஸ் ஏ320 விமானம் ஜெர்மனியில் உள்ள டசல்டார்ப் நகருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) சென்றுகொண்டிருந்தது. பிரான்ஸின் தென்கிழக்கில் இருக்கும் பார்சிலோனெட் பகுதியில் பறந்தபோது கீழே விழுந்ததாக தெரிகிறது.

உள்நாட்டு நேரப்படி காலை 10.47 மணி அளவில் விமானத்திலிருந்து அவசர உதவி அழைப்பு வந்ததாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த விமானத்தில் 142 பயணிகளும் 6 ஊழியர்களும் இருந்தனர். ஜெர்மனி விமான நிறுவனமான லூப்தான்ஸாவின் மலிவு கட்டண பிரிவான ஜெர்மன்விங்ஸைச் சேர்ந்தது இந்த விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்டு கேசனூவ், விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

(Visited 13 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)