இசைமுரசு நாகூர் ஈ.எம்.ஹனீபா மறைவு

Filed in செய்திகள் by on April 9, 2015 0 Comments

EMHanifa

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்…

தமிழ் இசை உலகின் ஜாம்பவான் இசைமுரசு ஈ.எம்.ஹனீபா  தமது வெண்கல குரலில் இஸ்லாமிய சிந்தனைகளை தூண்டும் பல்வேறு சரித்திர நிகழ்வுகளையும் கூட பாடல்களாக பாடி தமிழகம் மட்டுமல்லாமல் உலகில் வாழும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றவர்.

தமிழகத்தின் கிராமம் முதல் நகரம் வரை ஈ.எம்.ஹனிபா அவர்களின் கால் பதியாத ஊர்கள் என்பதே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு மேடை கச்சேரி நடத்தியவர்.

இறைவனிடம் கையேந்துங்கள்….அவன் இல்லையென்று சொல்லுவதில்லை.என்ற பாடலின் மூலம் இறைவன் மீதான அடியார்களின் நம்பிக்கையை பிரதி பலித்தவர்.

பெரியார் பிலாலின் தியாக வாழ்வை சொல்லுவேன் இதோ…..பிரியாத அன்பு பூண்டனர் பெருமானார் மீதிலே…என்ற பாடலின் மூலம் பிலால்(ரலி)அவர்களின் சரித்திரத்தை ஒவ்வொரு முஸ்லிம்களின் உள்ளத்திலும் ஆழமாய் பதிய வைத்தவர்.

இன்னும் இதுபோன்ற ஆயிரக்கணக்கான பாடல் மூலம் தமிழ் முஸ்லிம்களின் உள்ளத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்துக்கொண்ட பெரியவர் நாகூர் ஹனீபா.
அன்னாரின் மறுமை வாழ்வுக்கு வல்ல நாயனிடம் துஆச் செய்வோமாக!

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.

4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

(Visited 20 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)