கூகுளின் மின்னல் வேக கணினி! குவாண்டம் கணினி!!

Filed in பல்சுவைப் பகுதி by on December 21, 2015 0 Comments

கூகுள் நிறுவனம், ‘குவாண்டம்’ தொழில்நுட்பத்தைக் கொண்ட கணினிகளை வடிவமைக்கும் திட்டம் குறித்து ஏற்கனவே தெரிவித்திருந்தது.

GooglesLightning-speedComputer_SECVPF_gif

இந்நிலையில், நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளும் இத்திட்டம் தொடர்பாக தற்போது மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, இவை சாதாரண டேப்லெட்களை விடவும் 100 மில்லியன் மடங்கு வேகம் கொண்டது.

மேலும் குவாண்டம் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் முதலாவது கணினி இது என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசொப்ட் நிறுவனம், ‘நாம் அனைவரும் எதிர்வரும் 10 ஆண்டுகளில் குவாண்டம் கணினிகளிலேயே பணிபுரிவோம்’ என்று ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

குவாண்டம் கணினி என்றால் என்ன?

குவாண்டம் கணினி என்பது 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரிய நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கணினி ஆகும். சங்கேதபடுத்தபட்ட ஃபோட்டான் சங்கிலிகளை (Encoded String of Photon) பயன்படுத்தி குவாண்டம் கணினியை கண்டறிந்தனர். கண்கட்டு குவாண்டம் சங்கேத முறையில் (Quantum Cryptography Method) இயங்கும் இவ்வித கணினியில் தரவுகளை ரகசியமாக கையாளலாம். குவாண்டம் கணினியின் மூலம் தரவுகளை ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு பாதுகாப்பாக அனுப்ப முடியும்.

https://en.wikipedia.org/wiki/Quantum_computing

(Visited 50 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)