திருவாரூரில் இருக்கும் ஒரு ரயில்வே மேம்பாலத்தை மரண பாலம் என்று கூறுவதுண்டு – ஜப்பானில்?

என்ன, இந்த பாலத்தை பார்த்தவுடனே அடி வயிறு கலங்குதா?சாதாரணமாக பாலங்களின் வடிவமைப்பு வாகனங்கள் எளிதாக ஏறி, இறங்கும் விதத்தில் அமைக்கப்படுவதுண்டு. ஆனால், அந்த இடத்தின் நில அமைப்பு, கட்டடங்கள் போன்றவற்றை கருதி, வளைவு நெளிவுகளுடன் மாற்றி அமைக்கின்றனர்.

இந்தநிலையில், ஜப்பானில் கட்டப்பட்டிருக்கும் ஒரு பாலம் தினசரி, அதில் செல்லும் வாகன ஓட்டிகளை அடி வயிறு கலங்க வைக்கிறது. அந்தளவு இந்த பாலத்தை சரிவாக அமைத்துள்ளனர். திருவாரூரில் இருக்கும் ஒரு ரயில்வே மேம்பாலத்தை மரண பாலம் என்று கூறுவதுண்டு. அதுபோன்று, இந்த பாலமும் வாகன ஓட்டிகளை கதிகலங்க வைக்கிறது. ஸ்லைடரில் வந்து பாருங்கள், அடி வயிறு கலங்குவது உறுதி…
MarBridge1

ஜப்பான் பாலம் ஜப்பானிலுள்ள மேட்சூ மற்றும் சகைமினாட்டோ நகரங்களுக்கு இடையில் இருக்கும் ஏறியின் மீது இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒஹாஷி என்று பெயர்.
MarBridge2
உலகின் மூன்றாவது பெரிய பாலமாக இதனை குறிப்பிடுகின்றனர். 1.7 கிமீ நீளமுடைய இந்த இந்த பாலம் 11.4 மீட்டர் அகலம் கொண்டது. முழுவதும் கான்க்ரீட் மூலமாக அமைக்கப்பட்டுள்ளது.
MarBridge3

பாலங்கள் பெரும்பாலும் படிப்படியாக உயரம் அதிகரிக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த பாலம் 6.1 சதவீதம் சரிவுடன் கட்டப்பட்டுள்ளது. இது வழக்கத்தைவிட மிக அதிகமான சரிவு கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. மலைச்சாலைகளில் செல்வதை விட ஓட்டுனருக்கு கடினமானதாக இருக்கும்.
MarBridge4
இந்த பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு வசதியாக இந்த அளவு செங்குத்தாக கட்டியுள்ளனராம்.
MarBridge5

(Visited 111 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)