பூமியை விண்கல் தாக்கினால் மீண்டும் பனியுகம் ஏற்படும்!

Filed in பல்சுவைப் பகுதி by on February 11, 2016 0 Comments

வாஷிங்டன்.

அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் சமீபத்தில், விண்கல் ஒன்று பூமிக்கு மிக அருகில் கடக்க உள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது. ஒரு கிலோ மீட்டர் அகலமுடைய அது மார்ச் மாதத்தின் போது நிலாவை விட 21 மடங்கு அருகில் பூமியை கடக்கலாம் என்றும் தெரிவித்திருந்தது.

EarthIceAge
இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தேசிய வளிமண்டல ஆராய்ச்சி நிலையத்தின் சார்லஸ் பார்தீன், பேசும் போது

இந்த விண்கல் பூமியில் விழுந்தால் 15 கிலோ மீட்டர் அகலமுடைய பள்ளத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக ஏராளமான தூசுகள் வளிமண்டலத்தில் ஏற்படும். ஒரு வேளை இந்த விண்கல் பாலைவனத்தில் விழாமல் வேறு இடத்தில் விழுந்தால் அதிக தீப்பிழம்பை ஏற்படுத்தும்.

இதன் மூலம் கிளம்பும் புகை 10 ஆண்டுகள் வரை வானில் இருக்கும். தூசுகள் மீண்டும் பூமியில் படிய 6 ஆண்டுகள் எடுத்துகொள்ளும். இதனால் பூமியை அடையும் சூரிய ஒளியின் அளவு 20 சதவீதமாக குறையும். இறுதியாக பூமியின் வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு செல்லும். இது பனியுகத்தின் வெப்பநிலைக்கு ஒப்பானது. பூமியில் பெய்யும் மழையின் அளவு 50 சதவீதம் வரை குறைந்துபோகும் என்று தெரிவித்துள்ளார்.

எனினும், விண்கல் பூமிக்கு எவ்வளவு தூரத்தில் இருந்து கடக்கும் என்பது துல்லியமாக தெரியவில்லை. இதனால் பாதிப்பு ஏற்படக்கூடும் சாத்தியக்கூறுகள் குறைவு என்று நாசா தெரிவித்துள்ளது.

தேசிய வானியல் சந்திப்பு 2015  என்ற மாநாடு லண்டனில் கடந்த நவம்பர் மாதம் இங்கிலாந்து வேல்ஸ் நகரில் நடிபெற்ற்டஹு  மாநாட்டில் பேசிய நார்தம்ரியா பல்கலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர் வேலண்டினா ஜர்கோவா என்பவர் சூரியனின் இயக்க சக்தி குறித்த புதிய மாடல் ஒன்றை குறித்த முடிவுகளை வெளியிட்டார்.

2030ம் ஆண்டில் சூரியன் உறங்கும் நிலைக்கு செல்லும் என்றும் அதன் வெப்பநிலை அதிக அளவில் குறையும் என்றும் தங்களது கணிப்பு குறித்து கூறியுள்ளனர்.  இதனால் ஐஸ் ஏஜ் எனப்படும் சிறிய அளவிலான புதிய பனி காலம் தோன்ற கூடும் என வும் தெரிவித்து உள்ளார்.

(Visited 24 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)