ப்ரீடம் ரூ.251 ஸ்மார்ட்போனின் முன் பதிவு நிறுத்தம் வாடிக்கையாளர்கள் தவிப்பு!

Filed in பல்சுவைப் பகுதி by on February 20, 2016 0 Comments
புதுடெல்லி,
உலகின் மிகக்குறைந்த விலையில் ப்ரீடம் 251 ஸ்மார்ட்போனின் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Freedom-251_SECVPF
மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை பிரபலப்படுத்துவதற்காக இந்திய மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ‘ரிங்கிங் பெல்ஸ்’, உலகிலேயே மிகக் குறைந்த விலையாக ரூ.251–க்கு ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியது.
இந்த குறைந்த விலை ஸ்மார்ட் போனுக்கான முன்பதிவு  பி்ப்ரவரி 17-ம் தேதி காலை 6 மணிக்கு  தொடங்கி வரும்  22-ம் தேதி இரவு 8 மணி வரை நடைபெறும் என்று  கூறப்பட்டிருந்தது. ஒரு நிமிடத்துக்கு 6 லட்சம்பேர் முன்பதிவு செய்ய முயன்றதால், இணையதளம் முடங்கியது.
இதனால், ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் முன்பதிவு சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், 24 மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் முன்பதிவு தொடங்கும் என்றும் முன்பதிவுக்கான பிரத்யேக இணையதளத்தில் தகவல் வெளியிட்டது.
அதனை தொடர்ந்து சீன நிறுவனமான ஆட்காம் ஐகான் 4 ஸ்மார்ட் போனின் மறுபதிப்பாக இந்த ப்ரீடம் 251 ஸ்மார்ட்போன் உள்ளதாகவும், இந்த விலைகுறைப்பிற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியதாக தகவல் வெளியானதை தொடர்ந்து மத்திய அரசு அறிமுகப்படுத்திய ப்ரீடம் 251 ஸ்மார்ட்போனின் முன்பதிவு மற்றும் விற்பனை நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
‘ரிங்கிங் பெல்ஸ் அறிவித்துள்ள வசதிகளைக் கொண்ட ஸ்மார்ட் போனை மிகக் குறைந்தபட்சமாக ரூ.2,600–க்குத்தான் விற்பனை செய்ய முடியும். அத்துடன் வரி, விற்பனை லாபம் ஆகியவற்றை சேர்த்தால், ரூ.4 ஆயிரம்வரை ஆகும். ஆகவே, ரூ.251–க்கு ஸ்மார்ட் போன் வழங்குவதாக அறிவித்திருப்பது வாடிக்கையாளர்களை ஏமாற்றும் செயல். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று மொபைல் போன் உற்பத்தியாளர் சங்கத்தினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
(Visited 21 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)