பிரபலமான வங்கிகளில் 1793 பணியிடங்கள் பிளஸ்-2 மற்றும் டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு

Filed in வேலை வாய்ப்புகள் by on November 23, 2015 0 Comments

இந்தியாவில் செயல்படும் முன்னணி வங்கிகளான சிண்டிகேட் வங்கி, கனரா வங்கி, நேஷனல் வங்கி, ஸ்டேட் வங்கி, ஏசியன் டெவலப்மென்ட் வங்கி, ஆந்திரா வங்கி, யூகோ வங்கி போன்றவற்றில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங் களை நிரப்ப அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 1793 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

Building and sign bank (done in 3d)

Building and sign bank (done in 3d)


பணி விவரமும், பணியிடங்களும்:-

எச்.பி.எஸ்.சி.பி – 156 பணியிடங்கள் (ஜூனியர் கிளார்க்)
ஆந்திரா வங்கி- 200 (புரபெசனரி ஆபீசர்)
சிண்டிகேட் வங்கி (பெங்களூரு) – 311 (அட்டன்டர், பார்ட் டைம் ஸ்வீப்பர்)
ஸ்டேட் வங்கி- 8 (ஸ்பெசல்ஸ்ட் ஆபீசர்)
நேஷனல் ஹவுசிங் வங்கி- 8 (அசிஸ்டண்ட் மேனேஜர்)
கனரா வங்கி செக்யூரிட்டி லிமிடெட்- 3 டெபுட்டி மேனேஜர்.

வயது வரம்பு:

எச்.பி.எஸ்.சி.பி வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயதிலிருந்து 45 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆந்திரா வங்கி பணிக்கு 20 வயதிலிருந்து 28 வயதிற்குட்பட்டவராகவும், சிண்டிகேட் வங்கி பணிக்கு 18 வயது முதல் 26 வயதிற்கு உட் பட்டவராகவும் இருக்கவேண்டும். பொதுவாக குறிப்பிட்டுள்ள அனைத்து வங்கி பணிகளுக்கும் 18 வயது முதல் 45 வயது வரை தகுதியாக கேட்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் பணியிடங்களுக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடுகிறது.

கல்வி தகுதி:

பொதுவான பணிகளுக்கு நல்ல மதிப்பெண் களுடன் பிளஸ்-2 தேர்ச்சியும், குறிப்பிட்ட பாடப்பிரிவில் இளங்கலை பட்டமும், கல்வி தகுதியாக கேட்கப்பட்டுள்ளது. மேலும் பொறியியல் படிப்புகளை முடித்தவர்களுக்கும் வாய்ப்புகளை வழங்கும் பணியிடங்கள் உள்ளன.

தேர்வு முறை:

பணியிடங்களுக்கு ஏற்ப விண்ணப்பதாரர் களுக்கு எழுத்து தேர்வு, நேர்காணல், திறமை தேர்வு போன்றவை நடத்தப்படும். வெற்றி பெறுபவர்கள் அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறைகள்:

வங்கிகளுக்கு ஏற்ப விண்ணப்பிக்கும் முறைகள் மாறுபடுகின்றன. சில வங்கிகளுக்கு ஆன்லைன் மூலமாகவும், சிலவற்றிற்கு அஞ்சல் முறையிலும் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க மார்பளவு புகைப்படம், கல்வி சான்றிதழ், கையப்பம் போன்றவற்றை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தேவைக்கு ஏற்ற வாறும் தகவல்களை நிரப்பி ஆவணங்களை அப்லோடு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இறுதியாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து கொள்வது பிற்கால தேவைக்கு பயன்படும். அஞ்சல் முறைகளில் விண்ணப்ப படிவத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து தகவல்களை நிரப்பி குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். சில வங்கிகளில் கட்டணத்தை வங்கி கட்டணமாக செலுத்தியும், சிலவற்றில் அஞ்சல் முத்திரையாகவும் இணைக்க வேண்டி யிருக்கும்.

பணியிடங்களின் விவரம், கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றை அந்தந்த வங்கிகளின் இணைய தளங்களில் படித்துவிட்டு விண்ணப்பிப்பது நல்லது.

விண்ணப்பிக்க கடைசி தேதிகள்:

எச்.பி.எஸ்.சி.பி. வங்கி-28-11-2015
ஆந்திரா வங்கி-1-12-2015
சிண்டிகேட் வங்கி (பெங்களூரு) – 30-11-2015
நேஷனல் ஹவுசிங் வங்கி- 30-11-2015
கனரா வங்கி செக்யூரிட்டி லிமிடெட்- 30-11-2015.

(Visited 30 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)