ரமலான்! தவறவிட்டு விடக்கூடாது!!

Filed in இஸ்லாம் by on June 14, 2015 0 Comments

கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

இதோ இன்னொரு ரமலான் வர இருக்கிறது.

மார்க்கத்தின் பெரும்பான்மையான கடமை நிறைவேற்றப்படுகிற மாதம் பெரும்பான்மையான முஸ்லிம்கள் மார்க்கத்தை கடைபிடிக்கிற மாதமும் கூட

எந்த உணர்வோடு வரவேற்க வேண்டும். ?

ஏதோ ரமலான் வருகிறது. இப்தாருக்கும் சஹ்ருக்கும் தராவீஹுக்குமான நாள் என்ற சராசரியான உணர்வுடன் வரவேற்க கூடாது. ஈமானுடனும் இஹ்திஸாபுடனும் வரவேற்போம். அல்லாஹ் இதில் நிறைய நன்மைகளை தருகிறான் என்ற அழுத்தமான நம்பிக்கையோடும்,நமக்கும் தருவான் என்ற எதிர்பார்ப்போடும் ரமலானை வரவேற்க வேண்டும். என்வே ரமலான்! தவறவிட்டு விடக்கூடாது என்ற வேகம் வேண்டும். இது தவறினால் எல்லாம் தவறியதாக பொருள்.துரதிஷ்ட சாலிகள் மட்டுமே இதில் அலட்சியமாக இருப்பார்கள் என முழு இறைநம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும்-இதன் நன்மைகளை இழந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கையோடும் ரமலானை வரவேற்க வேண்டும.

நமது முன்னோர்கள் காட்டிய அக்கறை அலாதியானது.

வட இந்தியாவின் அறிஞர் பெருமகனார் அப்துர்ரஹீம்ராய்ப்பூரி

ஷஃபான் பிறை 29 ல் சீடர்கள் நணபர்கள எல்லோரையும் அழைத்து முஸாபஹா செய்து இன்ஷா அல்லாஹ் வாய்ப்புக் கிடைத்தால் ரமலானுக்குப் பின் சந்திக்கலாம் என்று சொல்லி அனுப்பி விடுவார். தபால்களை பார்க்க மாட்டார். ஒரு கூடையில் போட்டுவைக்குமாறும் ரமலானுக்குப் பிறகு இன்ஷா அல்லாஹ் படித்துக் கொள்ளலாம் என்றும் சொல்லிவிடுவார். ரமலான் முழுக்க இஃதிகாபில் இருப்பர்.

முஜத்தின் அல்பஸானி (ரஹ்) சொல்வார்.

ரமலானின் பரகத் கடல் போன்றது, மற்ற மாதங்களின் பரக்கத் அதில் ஒரு துளி அளவுக்குத் தான்.

பல பெரியவர்கள் பெருநாளுக்கான ஆடைகளை மற்ற தேவைகளை ரமலானிலேயே முடித்து விடுகிற பழக்கம் கொண்டிருந்தனர்.

சிலர் காயகறிகளை கூட் மொத்தமாக வாங்கி வைத்து விடுவர்.

நம்மில் பலரும் ரமலானுடைய அற்புதமான பொழுதுகளை ஷாப்பிங்கில் இழக்கிறோம்.

குறிப்பாக ரமலானுடைய அதி அற்புதமான கடைசி பத்துக்கள் மொத்தமும் கடைவீதிக்குறியதாகிவிடுகிறது.

பள்ளிவாசல்களில் நோன்பு திறப்பவர்களின் எண்ணிக்கையை விட கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

குறிப்பாக பெண்கள் ரமலான் அவர்களுக்கு ஷாப்பிங்க் மாதமாகவே மாறிவிடுகிறது.

இந்த உணர்வு குழந்தைகளிடம் தொற்றிக் கொள்கிறது,

நாம் நமது முன்னோர்கள் காட்டிய கவனத்தை கொஞ்சமாவது நினைவில் நிறுத்தி செயல்படுவோம்.முன்னோர்கள் தமக்கென தனித்தனி வழி முறைகளை வைத்திருந்தனர்.

பார்வை பழுதுபட்டிருந்த நிலையிலும் 3 நாளில் ஒரு குர் ஆன் ஓதல்.

குர் ஆன் ஓதுவதுடன் ஹதீஸ் படித்தல்.

விருந்தாளிகளுடனேயே நோன்பு திறந்த இப்னு உமர்

இப்னு உமர் ரலி சாதாரணமாக தனக்கென எதையும்வைத்துக் கொள்ளாத பெரும் கொடையாளி அரசாங்கத்திடமிருந்து தனது பணிகளுக்காக கிடைத்தஊதியத்தை அன்றே ஏழைகளுக்கு கொடுத்து விட்டு அடுத்தநாள் தனது வாகனத்திற்கு தீனியை கடைத்தெருவில்கடனாக வாங்கிக் கொண்டிருப்பார்.

நாம் நமக்கான நன்மைகளின் ஒரு வழியை நமக்கு சாத்தியப் பட்ட விதத்தில் அமைத்துக் கொள்வோம்.

ரமலானில் மார்க்கம் கற்றுத்தந்திருக்கிற பிரதான அமல்கள் அனைத்தையும் கடைபிடிப்போம்,.அல்லாஹ் கிருபை செய்வானாக! உடல் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும்., சகல வாய்ப்பு வசதிகளையும் தந்தருள்வானாக!

எனக்கு லோ சுகர் நோன்பு வைக்கனும்னு ஆசைப்படுகிறேன் ஹஜ்ரத் துஆ செய்யுங்கள் என்று கடந்த வாரம் ஜும் ஆவுக்குப் பின் முஸாபஹா செய்த ஒரு பெரியவர் சொன்னார்.

உங்களது ஆர்வத்திற்கு அல்லாஹ் நிச்சயமாக அல்லாஹ் பரக்கத் செய்வான். வாய்ப்புத்தருவான்.மருத்துவரின் ஆலோசனையுடன் செயல் படுங்கள்.நோன்பு வைத்த பிறகு தலை சுற்றல் அல்லது கிறுகிறுப்பு தோன்று மென்றால் தயங்காமல் நோன்பை விட்டு விடுங்கள், நீங்கள் அரோக்கியமாக இருக்கிற போது நோன்பு நோற்றிருந்தால் இப்போது நீங்கள் நோன்பை நோயினால் விட்டாலும் அல்லாஹ் நோன்பாளியாகவே உங்களை கணக்கில் எடுத்துக் கொள்கிறான் என்று சொன்னேன்.

கண்ணீல் நீர் கசிய அவர் கைகளை விடுவித்து விடை பெற்றார்.

நமக்கு அல்லாஹ் தந்திருக்கிற ஆரோக்கியமான சுகமான ஆயுளை நாம் பயன்படுத்திக் கொள்வோம்.

  • நோன்பு
  • தராவீஹ் மற்றும் நபில் தொழுகைகள்
  • ஜகாத் – சதகா
  • திலாவத
  • இஃதிகாப்
  • தஸ்பீஹ்
  • திக்ரு
  • இஸ்திக்பார் துஆக்கள்

என அனைத்து வகையான இபாதத்துக்களுக்கும் திட்டமிடுவோம்.

ரமலான் மாதம் முழுவதும் நோன்பு வைப்போம்.

மறந்து விடவேண்டாம் . இது அல்லாஹ்வின் உத்தரவு

அற்பக் காரணங்களைச் சொல்லி நோன்பை விடுவோர் எச்சரிக்கை அடையட்டும். அவர்கள் எந்த கடமைவிடுகிறார்கள்? எத்தகைய நன்மையை விடுகிறார்கள்?

தொழுகை அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமானது. அதிலும் இரவுத்தொழுகை இன்னும அதிகமாக அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்றுத்தரக் கூடியது. அது எனது அடியார்களின் இயல்பு என அல்லாஹ் கூறுகிறான்.

தராவீஹ் மட்டுமல்ல அதற்கப்பாலும் இரவுத் தொழுகைகளில் நாம் கவனம் செலுத்தனும். ஸஹருக்கு சற்று முன்னதாக எழுந்து தொலைக்காட்சி பெட்டியை திறக்காவிட்டால் தஹஜ்ஜது தொழுதுவிடலாம். இரவுத்தொழுகை அபரிமிதமான நன்மைகளுக்குரியது, பஜ்ரு வரை இரவுத்தொழுகைகளில் ஈடுபட்ட முன்னோர்கள்

தராவீஹ் தொழுகிறவர்கள் கவனிக்க வேண்டும். தராவீஹ் என்பது இஷாவின் பர்ளுக்கு பிறகு தொழுகிற தொழுகையாகும். பொதுவாக சுன்னத்தான தொழுகைகளை விட பர்ளுகளுக்கு அதிக முக்கியத்துவம்தர வேண்டும்.

ரமலானில் தானதர்மங்களை அதிகமாக செய்ய வேண்டும்.
ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்க வேண்டும். மற்றகாலங்களில் கொடுப்பதை விட அதிக நன்மை கிடைக்கும்.ஆனால் பிற்படுத்தாமல் முற்படுத்தி கொடுக்க முயற்சிசெய்ய வேண்டும்.
மற்ற தர்மங்களையும் தாராளமாக செய்ய வேண்டும். நோன்பு திறக்க சஹர் ஏற்பாடுகளுக்கு உதவனும். நம்முடன் இல்லாதவர்களை சேர்த்துக் கொள்ளனும்

நன்மைக்கான சிறு வழியையும் விட்டு விட வேண்டாம்

ஒரு முக்கிய எச்சரிக்கை ரமலானில் வீண்களியாட்டங்களில் ஈடுபடாதீர்கள். அது ரமலானை அவமதித்தாகி விடும்.

மறந்து விடாதீர்கள். ரமலானில் நாம் சீதேவி ஆகவேண்டும்.துரதிஷ்ட்சாலி ஆகிவிடக்கூடாது.

(Visited 79 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)