உலகில் உயர்ந்து விடுகிற எந்த பொருளாயினும் ஒருநாள் அது கீழே வரும்!

Filed in ஹதீஸ் தொகுப்பு by on October 25, 2012 0 Comments

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ‘அள்பா’ என்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவராலும் வெல்லமுடியாத (அளவுக்கு விரைவாக ஓடக்கூடிய) தாக இருந்தது. (ஒரு பயணத்தின்போது) கிராமவாசி ஒருவர் தம் (ஆறு வயதுட்குட்பட்ட) வாட்டசாட்டமான ஒட்டகத்தின் மீது வந்து நபிகளாரின் அந்த ஒட்டகத்தை முந்தி சென்றார். இது முஸ்லிம்களுக்கு மிகுந்த மனவேதனையை அளித்தது. முஸ்லிம்கள் அள்பா பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது என்று கூறினர். (இதை அறிந்த) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உலகில் உயர்ந்து விடுகிற எந்த பொருளாயினும் நிச்சயமாக (ஒருநாள்)  அதை கீழே கொண்டு வருவதே அல்லாஹ்வின் நியதியாகும் என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 82, எண் 6501

(Visited 31 times, 1 visits today)

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)