பொறுமையும் நபிவழியே!

Filed in ஹதீஸ் தொகுப்பு by on November 6, 2012 0 Comments

Today's Hadeesபிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

நாங்கள் ஒரு சமயம் அல்லாஹ்வின் தூதர் அவர்களுடன் இருந்த போது கிராமத்து அரபி ஒருவர் வந்து
பள்ளிவாசலில் சிறுநீர் கழிக்க துவங்கி விட்டார். அல்லாஹ்வின் தூதர் அவர்களின் தோழர்கள் “தடுத்துக்கொள்”
தடு;த்துக்கொள்” எனக்கூறினர். அவரைத் நிறுத்தி (தடுத்து) விடாது விட்டு விடுங்கள் என, அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற அந்நபரை அவர்கள் (சிறுநீர் கழித்து முடியும் வரை) விட்டு விட்டனர்.
அதன்பிறகு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரை அழைத்து “இந்தப்பள்ளிகள்
இது போன்ற சிறுநீர் கழிக்கவோ, அல்லது அசுத்தங்களை போடவோ உரியதல்ல. ஆயினும் அவை கண்ணியமும் மேன்மையும்
பொருந்திய அல்லாஹ்வை நினைவு கூறுவதற்கும், இன்னும் திருமறையை ஓதுவதற்கும் மட்டுமே சரியான (உரிய)தாகும்.
கூட்டத்திலிருந்த ஒரு மனிதரை ஒரு வாளி தண்ணீர் கொண்டு வருமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கட்டளையிட்டனர். (அவர் கொண்டுவந்து) அதன்மீது பரவலாக ஊற்றினார்.

அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு

ஆதாரம்:முஸ்லிம், ஹதீஸ் எண் : 186

(Visited 62 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)