ஸுப்ஹு, அஸர் தொழுகையை பேணிக்கொள்வது

Filed in ஹதீஸ் தொகுப்பு by on November 6, 2012 0 Comments

Today's Hadeesபிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

சூரியன் உதயத்திற்கு முன் (ஃபஜ்ரையும்) அது (மாலையில்) அடைவதற்குமுன் அஸரையும் தொழுதவர் நரகம் புகமாட்டார் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் செவியுற்றேன்என ருஜபாவின் தந்தை கூறுகிறார். பஸரா வாசிகளில் ஒரு மனிதர் அவரிடம் இதை நீர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து தான் கேட்டிரா? என அவரிடம் கேட்டார் அதற்கு ஆம்! என்றார் (அவ்வாறென்றால்)

நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து அதைச் செவியுற்றேன். என் காதுகள் கேட்டன. எனது மனம் அதை பேணிப்பாதுகாத்து கொண்டது என நான் சாட்சி கூறுகிறேன் என (அம்) மனிதர் கூறினார்.

அறிவிப்பவர் : அபூபக்கர் பின் உமாராபின் ருஜபா ரளியல்லாஹு அன்ஹு என்பவர் தமது தந்தை கூறியதாக அறிவிக்கிறார்.

ஆதாரம் முஸ்லிம்,ஹதீஸ் எண் : 208

(Visited 42 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)