இன்றைய தினம் செய்தீர்க‌ளா?

Filed in இஸ்லாம் by on January 26, 2014 0 Comments

இன்றைய தினம் செய்தீர்க‌ளா?

1. பஜர் தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுதீர்களா?

2. காலைப் பொழுதிற்கான திக்ரை செய்தீர்களா?

3. ஐந்து நேரத் தொழுகையையும் அதனதன் முதல் நேரத்தில் சரியாகத் தொழுதீர்களா?

4. ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் வரையறுக்கப்பட்ட திக்ரை செய்தீர்களா?

5. ஒரு நாளுக்குரிய 13 ரகஅத் சுன்னத்தையும் தொழுதீர்களா?

6. முஸ்லீம் உம்மத்துக்காக குனூத் அல்லது துஆ செய்தீர்களா?

7. உங்களது தாய், தந்தைக்காக துஆ செய்தீர்களா?

8. இன்று ஏதாவது ஒரு நன்மையை ஏவினீர்களா?

9. இன்று ஏதாவது ஒரு தீமையைத் தடுத்தீர்களா?

10. பர்ளான தொழுகையை ஒன்றுக்கு மேற்பட்ட நேரங்களில் பள்ளியில் ஜமாஅத்துடன் தொழுதீர்களா? (ஆண்களுக்கு)

11. குர்ஆனின் ஒரேயொரு வசனத்தையாவது அதன் பொருளோடு படித்து, அறிந்து, உணர்ந்தீர்களா?

12. ஏதாவது ஒரு புதிய ஹதீஸை அதன் பொருள் விளக்கத்தோடு படித்து அறிந்தீர்களா?

13. குறைந்த அளவாக குர்ஆனின் ஒரு பக்கமாவது ஓதினீர்களா?

14. கற்றல் அல்லது கேட்டலின் மூலம் அறிவைப் பெருக்க முயன்றீர்களா?

15. நீங்கள் சரியாக கடைபிடிக்காத ஒரு புதிய சுன்னத்தை கடைபிடித்தீர்களா?

16. ஒரு முஸ்லீமின் மகிழ்ச்சிக்காவது காரணமாய் இருந்தீர்களா?

17. உங்களுடைய பெற்றோரை மகிழ்வித்தீர்களா? அவர்களை ஆரத்தழுவி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினீர்களா?

18. யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருந்தீர்களா? யாரையும் பற்றி புறம் பேசாமல் இருந்தீர்களா?

19. யாரைப்பற்றியும் வீணாண, தவறான எண்ணங்கள் வராமல் தங்கள் மனதை தூய்மையாக வைத்தீர்களா?

20. அனுமதிக்கப்பட்டதா இல்லையா என சந்தேகமான விஷயத்தை விட்டும் தவிர்ந்து கொண்டீர்களா?

21. உங்கள் உடல் நலத்தில் இயன்ற அளவு கவனம் செலுத்தினீர்களா?

22. தர்மம் செய்தீர்களா? (பொருளால்)

23. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அல்லது அதன் பாதிப்புக்கு எதிராக எதாவது செய்தீர்களா?

24. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்களுக்காக பிரார்த்தித்தீர்களா?

25. பாவமன்னிப்புக்காக தவ்பா மற்றும் இஸ்திஃபார் செய்தீர்களா?

26. இந்த தீனுக்காக குறைந்தது 10 நிமிடங்கள் உழைத்தீர்களா?

27. உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த வகையில் ஏதாவது ஒரு நன்மையான காரியத்தை மறைவாகச் செய்தீர்களா?

28. உண்ணும் போதும் பருகும்போதும் வீண் விரயங்களை தவிர்த்தீர்களா?

29. அஸர் நேரத்து திக்ரை செய்தீர்களா?

அஸ‌ருக்கு பின் ஓத வேண்டிய ஸ‌ல‌வாத்தை ஓதினீர்களா? 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா? அல்லது அதில் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்தீர்களா?

31. இறப்பு மற்றும் மறுமை வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தீர்களா?

32. தஹஜ்ஜத் நேரத்தில் குறைந்தது இரண்டு ரகஅத்களாவது தொழுதீர்களா?

33. வித்ரு தொழுகையை தொழுதீர்களா?

34. உங்களுடைய சுவர்க்க வாழ்வுக்காகவும், நரக மீட்சிக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தீர்களா?

35. உளு உடைய நிலையிலேயே உறங்கச் சென்றீர்களா?

36. எந்த மனிதர் மீதும் கெட்ட எண்ணம் ஏதும் இல்லாத நிலையில் உறங்கச் சென்றீர்களா?

Abdur ரஹ்மான்

Adiyakkamangalam

(Visited 59 times, 1 visits today)

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)