இயற்கையான அழகு பெற வேண்டுமா?பப்பாளி பழம்

Filed in உடல்நலம் by on April 24, 2015 0 Comments

பப்பாளி பழம்

40 வயதைத் தாண்ட ஆரம்பித்தவுடன் பெண்களுக்கு வரும் முக்கியப் பிரச்னை சரும சுருக்கம். இதனால் அவர்கள் தங்கள் தன்னம்பிக்கையையே இழக்க ஆரம்பிக்கின்றனர். தங்களுக்கு வயதாகிவிட்டதோ என்று கவலைப்பட ஆரம்பித்துவிடுகின்றனர். இதைச் சரியாக புரிந்து கொண்ட பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த கிரீம், அந்த கிரீம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் பெற்று, பிரயோஜனமற்ற கிரீம்களை விற்று தீர்க்கின்றன. இது தெரியாமல் பலரும் இவற்றை வாங்கி, பாதிப்பையும் அதிகப்படுத்திக் கொள்கின்றனர்.

ஆனால், இயற்கையே நமக்கு இந்த குறையை தீர்க்கும் வழியை கொடுத்துள்ளது. அதுவும், வாய்க்கு ருசியான வழியில் இதை கொடுத்த இயற்கையை பாராட்டியே ஆகவேண்டும். ஆம், பப்பாளிதான் அந்த இயற்கையின் வரம். பப்பாளியை சாபபிடுவதன் மூலம் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறையத் தொடங்குகின்றன. மேலும், இதை அரைத்து முகத்தில் பூசுவதன் மூலம், முகம் பளபளப்பு பெறுகிறது. நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும். இதற்கு காரணம், முகத்தில் வலுவிழந்த செல்களுக்கு புத்துணர்வு அளிக்கும் பலம் பப்பாளியில் உள்ளதுதான். இந்த பப்பாளியில் மேலும் என்னென்ன பலன்கள் உள்ளன என்பதை பார்த்தால், இத்தனை நாள் இதை கண்டுக்கொள்ளாமல் இருந்துவிட்டோமே என்று வருத்தப்பட ஆரம்பித்துவிடுவோம்.

  • குண்டாக இருப்பவர்கள் பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டால் உடல் மெலியும்.
  • பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும். இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.
  • தேள் கொட்டினாலும், பூரான் கடித்தாலும் வலி உயிர்போகும். அந்த சமயத்தில் பப்பாளி விதைகளை அரைத்து பூச வலி, விஷம் இறங்கும்.
  • பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.
  • பப்பாளிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம் குறையும்.
  • பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
  • சிலருக்கு கையில் பேனாவை பிடித்து காட்ட முடியாது. அந்தளவுக்கு கைககள் நடுங்கும். இவர்கள் பப்பாளிப் பழத்தை தேனுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அந்த பாதிப்பு மறையும்.
  • குழந்தைகள் பலருக்கு வாயின் இருபுறத்திலும் புண்கள் ஏற்பட்டு தவிப்பார்கள். அவர்களுக்கு பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண் இருக்கும் இடத்தில் தேய்த்தால் அது மறையும். இதேபோல், புண்கள் மேலும் இதை பூசி ஆறுதல் பெறலாம். பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
  • பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
(Visited 163 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)