மூளையின் செயல்பாட்டுத்திறன்:ஞாபக மறதி வியாதி

Filed in உடல்நலம் by on May 10, 2015 0 Comments

வயது ஏற ஏற நமது மூளையின் செயல்பாட்டுத்திறன் குறைந்து கொண்டே வரும். மூளையின் திசுக்கள் சுருங்குவதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இது தவிர்க்க முடியாது. ஞாபக சக்தி குறையும். அல்சைமர்ஸ் வியாதி தாக்கும். இது மூப்படைவதால் ஏற்படும் குறைகள். இவற்றை நாம் போக்க முடியாது. ஆனால் இதன் வேகத்தை கட்டுப்படுத்தி, மூளையானது செயலிழக்கும் தன்மையை குறைக்கலாம்.

Free Radicals எனப்படும் நமக்கு ஒவ்வாத சக்திகள் நம் உடலில் சேராவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். இவைகள் நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றால் மூளையின் அமைப்பே முற்றிலும் பாதிக்கப்படும். இவை எவ்வாறு மூளைக்குள் நுழைகின்றன? சிகரட் புகை, நச்சுக்காற்று, கொழுப்பு நிறைந்த உணவு போன்றவை இந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே சிகப்பு மாமிசம் உண்பதை குறைக்க வேண்டும் நிறைய பழங்கள், காய்கறிகள் உண்ண வேண்டும். இவற்றில்  Anti – oxidants இருப்பதால் Radicals அழிக்கப்படும்.

மூளைக்கு இரத்தம் சென்று கொண்டே இருக்க வேண்டும். எனவே உடல்பயிற்சி, நடத்தல் அவசியம். மூளைக்கு மிகவும் அவசியமானது புதிது புதிதாக ஏதாவது வேலைகள், சவால் விடும் வேலைகளை நாம் தர வேண்டும். அதனால் இதன் அமைப்பு, திசுக்கள் ஆக்கமடைந்து, புத்துணர்வு பெற்று செயல்படும் இச்செயல்பாடுகளால் மூப்பில் வரக்கூடிய ஞாபக மறதி வியாதி நம்மை அண்டுவது தாமதமாகும். என்ன செயல்கள் நாம் செய்ய வேண்டும். புதியதாக ஏதாவது சங்கீத வாத்தியத்தைக் கற்றுக் கொள்ளுங்கள். வயலின், வீணை, கிடார் போன்றவை நம் நரம்பைத் தூண்டி, சப்தங்களால் நம் உறுப்புகளை நன்றாக செயல்பட வைக்கும். செஸ் ஆடுங்கள் சிந்தனையைத் தூண்டும் மூளையின் முன்பகுதி, பின் பகுதி ஆக்கம் பெறும்.

கால்களை, கைகளை ஆட்டுங்கள் ஒரு தாளகதியில் ஆடுங்கள் நரம்புகள் தூண்டப்படும். புத்தகங்கள் படியுங்கள். மனம், மூளை, கண்கள் போன்றவை நன்கு செயல்படும் இது நல்ல பயிற்சியாகும். இவைகள் நம் மூளையை வளப்படுத்தும். ஞாபக மறதி வியாதி விரைவில் நம்மை தாக்காது.

(Visited 373 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)