கல்லீரலைப் பற்றிக் கவலை படாமலிருந்தால்

Filed in உடல்நலம் by on May 10, 2015 0 Comments

நீங்கள் கல்லீரலைப் பற்றிக் கவலை படாமலிருந்தால் அது உங்கள் தேக நலத்தைப் பாதுகாக்காது. கல்லீரல் ஒரு முக்கியமான அங்கமாகும்.வேண்டாதவற்றை சுத்தம் செய்யும் சுத்திகரிப்பு நிலையமாகும் சேரும் குப்பையை உடம்பிலிருந்து அகற்றும் துப்பரவுத் தொழிலாளியாகும்.

நீங்கள் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். அது அமைதியாக, ஓசைபடாமல் தன் வேலையைச் செய்து கொண்டிருக்கும்.அதற்கு கேடு நேரிட்டால் அது சொல்லாது. மிகவும் மோசமான நிலையை, அபாய நிலையை தொட்டால் தான் அதை வெளிக்காட்டும்.

அதற்காக நாம் நல்ல அரோக்கியமான உணவை உண்ண வேண்டும். உடற்பயிற்சி அன்றாட செய்ய வேண்டும். சுத்தமான காற்றை நாம் சுவாசிக்க வேண்டும்
அதற்கு கேடு விளைவிக்கும் பொருள்களை தவிர்க்க வேண்டும்.

நாம் சாப்பிடும் உணவு நல்ல போஷாக்கு நிறைந்ததாக வைத்துக் கொள்ள வேண்டும்.நச்சுப்பொருள்களை நீக்கி கல்லீரலை சுத்தமாக, ஆரோக்யமாக வைத்திருக்கும்படியான உணவை நாம் உண்ண வேண்டும்.

ஆயுர்வேதப்படி கல்லீரல் நமது உடம்பில் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. நாம் உண்ணும் உணவு நன்கு செரிமானமாக உடம்பில் ஐந்து விதமான அக்னியுள்ளது.அவைகள் நன்கு வேலை செய்ய நல்ல தரமான உணவு தேவை. அது வேலையை சரிவரச் செய்யாவிட்டால் உணவு முழுமையாக ஜுரணமாகாது. சாப்பிட்ட உணவு ஜுரணமாகவிட்டால்
பலவித நோய்கள் உடலைத் தாக்கும். ரசதாதுயெனப்படும் பிளாஸ்மாவை இரத்தமாக (ரத்ததாது) மாற்றும் வேலையை கல்லீரல்தான் செய்கிறது.
இவ்வேலையைச் செய்ய கணையம் உதவி செய்தாலும், கல்லீரல் வேலை தான் அதிகமாக வேண்டப்படுகிறது.
எனவே ஈரலுக்கு ஏதாவது கோளாறு நேரிட்டால் இரத்தம் சம்பதமான வியாதிகள் வரும்.

எனவே நிறைய பழங்கள், பச்சைக்காய்கறிகள், தானியங்கள், புரோட்டீன் மிக்க பொருள்கள், நமது அன்றாட உணவில் சேர்க்க வேண்டும்.நல்ல கொழுப்பு பதார்த்தங்கள் கல்லீரலுக்கு வேலைச் சுமையைக் குறைக்கும். நிறைய தண்ணீர் குடித்தால் நச்சப்பொருள்கள் வெளியேறும்.

மஞ்சள் காமாலை, வீக்கம், பித்த நீர்ப்பை அடைப்பு, கற்கள், புழுக்கள் போன்றவற்றால் கல்லீரல் மிகவும் பாதிக்கப்படும்.
எனவே கீழ்கண்ட சுத்தமான உணவுகளை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

நோயின் தன்மையை பொருத்து மசாலா சாமன்களைச் சேர்க்கலாம், சேர்க்காமலிருக்கலாம். மசாலா வாசனைப் பொருள்கள் மிளகு, பெருங்காயம், லவங்கம், தனியா,
மற்றும் கீரைகள் ருசியைச் சேர்க்கும். நெய் மசாலாப் பொருள்களின் காரத்தை மட்டுப்படுத்தும். சில நோய்களுக்கு மசாலா பொருள்களைச் சேர்க்க கூடாது. அதைத் தவிர்க்க வேண்டும்.
தண்ணீர் மிகவும் உகந்தது. உணவில் சேர்ந்த தண்ணீர் மிகவும் சிறந்ததாகும்.

நீராகாரம்

(Rice Wtare with some Rice particles) ஒரு கப் அரிசிக்கு 14 கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். நன்றாக வெந்ததும் சூடான தண்ணீரை மட்டும் அருந்தவும்
மல்லி விதை (தனியா), சுக்கு, மிளகு, திப்பிலி. சைந்தவ் உப்பு (Sandhav) ஆகியவற்றை இரண்டு துளிகள் எடுத்து கொள்ளவும். இவற்றுடன் பச்சைப் பயிறு, அரிசி ஒருகப் எடுத்து 14 கப் தண்ணீர் சேர்க்கவும் கொஞ்சம் எண்ணெய், பெருங்காயம் சேர்த்தால் ருசியாக இருக்கும். இத்தண்ணீரைக் குடித்தால் உடலுக்கு வலுசேர்க்கும், ஹூமோகுளோபின் அளவும் அதிகரிக்கும், நன்கு பசியெடுக்கும் காய்ச்சலுக்கும் உகந்தது.

அரிசிக்கஞ்சி

ஒரு கப் அரிசியுடன் 14 கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும் நன்கு வெந்ததும் வடிகட்டி கொஞ்சம் அரிசி கலந்து தண்ணீரைக் குடிக்கவும்.
பாதி தண்ணீர் கலந்த உணவுகள்

கஞ்சி : 1 கப் அரிசியுடன் 6 கப் தண்ணீர் கலந்து நன்கு வெந்தவுடன் சாப்பிடவும். நல்ல கூழ் மாதிரி வைத்தவுடன் சாப்பிடவும் பசை மாதிரி இருக்க வேண்டும்.
தண்ணீர், மோர், மூலிகைக் கலவை : 1 கப் பச்சைப்பயிறு அல்லது வேறு பருப்பு வகையுடன் 14 கப் தண்ணீர் கலந்து கொதிக்க வைக்கவும் பருப்பு நன்கு வேக வேண்டும்.
பின்பு நன்கு கையால் பிசையவும். மோர், மூலிகைகள் சேர்ந்து சாப்பிடவும். கலவை ஒரளவு நீர்த்துக் காணப்பட வேண்டும்.
சூப் : சூப் சாப்பிடுவது மிகவும் நல்லது பச்சைப்பயிறு, கோதுமை, கொள்ளு போன்றவற்றை வறுத்து சூப்பாகச்செய்து சாப்பிடவும்.
இதனுடன் திராட்சை, மாதுளைப்பழம் சேர்த்தால் நன்கு பசியெடுக்கும் எளிதாக செரிக்கும்.

திட உணவுகள் (Solid Foods)

கப் அரிசியுடன் 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும், நல்ல கூழாக மாறியதும் சாப்பிடவும்.
அரிசி, பயத்தம்பருப்பு ஒருகப் எடுத்து இரண்டுகப் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைக்கவும் நன்கு வேகவேண்டும்.
இவற்றைத் தயார் செய்யு முன், அரிசியை லேசாக வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தானிய உணவு

அறுபது நாட்கள் நல்ல நிலையில் வைத்து உபயோகப்படக் கூடிய அரிசி, பார்லி, கோதுமை, செவ்வரிசி (கேரளாவில் இது அதிகம்) பச்சைப்பயிறு, மற்றும் பல பருப்பு வகைகள்.

பழங்கள்

பழங்கள், காய்கறிகள் நல்ல போஷாக்கை அளிக்கக் கூடியவை. கல்லீரலுக்கும், பொதுவான உடல் நலத்திற்கும் வேண்டிய வேதிப் பொருள்கள் அவற்றில் உள்ளன.
(உ.ம்.) கரோட்டினாய்ட்ஸ் பைடோ கெமிக்கல்ஸ் நிறைய உள்ளன. நிறைய பழங்கள் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை நம் உடல் பெறும். பொதுவாக பழங்கள் ஜுரணமாவதற்கு நேரமாகும். எளிதில் செரிமானம் ஆகக் கூடிய மாதுளைப்பழம், நெல்லிக்காய், திராட்சை, பேரிச்சை போன்றவற்றை எந்த வயதிலும் உட்கொள்ளலாம் கபமும் கட்டாது.

பாலில் செய்யப்பட்ட உணவுகள்

பசும்பால் மிகவும் உயர்ந்தது தயிரை விட மோர் மிகவும் சிறந்தது. சந்தவ் உப்பு (Sandhav) உப்பு நல்லதாகும்.
ஆப்பிள், இத்திப்பழம், அமலக்கா, திராட்சை, எலுமிச்சை, மாம்பழம், பப்பாளி, வெள்ளரிப்பழம் போன்றவற்றை சாறாக குறைந்த அளவில் சாப்பிட்டால் கல்லீரல் நோய்கள் அண்டாது. பல பழங்களின் வகைகளை ஒன்று சேர்த்து சாப்பிடுவது கெடுதல். அதுவும் பாலுடன் சாப்பிடக்கூடாது. இவற்றிற்கு விருத்த ஆகாரமென்று பெயர், காரம், புளிப்பு, துவர்ப்பு, போன்றவைகள் ஒன்று சேருவதால் சரியான விகிதத்தில் நம் இரத்தத்தில் கலக்காமல் பல நோய்களை உண்டாக்கும்.

காய்கறிகள்

காரட், முட்டைக் கோஸ், பாவக்காய், புடலங்காய், கொத்தமல்லி, வெந்தயக்கீரை (Fenugreek) போன்றவை உடல்நலம் சேர்க்கும்.

சிறப்பு உணவுகள்

ஆப்பிள் பழத்தை பிரஷர் குக்கரில் வேகவைத்து ( 5 நிமிடங்கள் வெந்தால் போதும்) நன்றாக பிசையவும். கூழ் போல் ஆனதும் தேனைக் கலந்து சாப்பிடவும். கல்லீரல் பலஹீனப்பட்டிருந்தாலும் பசியின்மை காணப்பட்டாலும் இதை உட்கொண்டால் நல்ல பலன் கிட்டும்.
அம்லகி (Amalaki) பழத்தில் வைட்டமின்”சி” நிறைய உள்ளது. பொடிசெய்து தேன், மிளகு (Long pepper), ஏலக்காய், ஜாவித்ரி பவுடர் (Javitri) கலந்து காற்றும் புகாமல் வைக்கவும். இதைச் சாப்பிட்டால் கல்லீரல் நோய்கள், இதயம், நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதிகள், பிரசவம் சம்பந்தப்பட்ட குறைகள் நீங்கும்.

திராட்சை ரசம் இரண்டு டீஸ்பூன், காரட் ஜீஸ் இரண்டு தேக்கரண்டி கலந்து தினசரி இரண்டு தடவை சாப்பிடும் பொழுது அருந்தவும். சிறுநீர் நன்கு போகும், நல்ல மல மிளக்கியாகும்.

எண்ணெய் ஒரு தேக்கரண்டி, கடுகு, மஞ்சள் து£ள், பூண்டு 4அல்லது 5 பல், பச்சை மிளகாய் போன்றவற்றுடன் எள் இலையை(DILL LEAF) நறுக்கி, அரைத்தப் பச்சைப்பயிறை சேர்த்து கொதிக்க வைக்கவும். உப்பு சேர்க்கவும். DILL LEAF ல் இரும்புச் சத்தும், கால்சியமும் அதிகமுள்ளன.
சோயா பீன்ஸ் பவுடர், பச்சைப்பயிர் மாவு, சீரகப்பவுடர், தனியாத்துள், அஜ்வெய்ன்(Ajwain), மிளகாய்த்துள்(விரும்பினால்) உப்பு கலந்து தண்ணீர் சேர்த்து பிசைந்து உருண்டைகளாகப் பண்ணவும். பின்பு அப்பளம் போல் இடவும். நீராவியில் வேக வைத்து எண்ணெய், கடுகு, பெருங்காயம் சேர்க்கவும். இக்கலவையில் கால்சியம், புரோடின், இரும்புச் சத்து உள்ளன.

செய்/செய்ய வேண்டாம்

ஆல்கஹால், எண்ணெய்ப் பதார்த்தங்கள் கூடாது. எண்ணெய் 20–30 கிராமிற்குமேல் தினசரி வேண்டாம்.

சீரகப்பவுடருடன் மோர் குடிக்கவும்.

தினசரி பூண்டு உணவில் சேர்க்க வேண்டும்.

கார்போஹைட்ரேட் இருக்கும் உணவு மிகமிக முக்கியம்.

அளவோடு சாப்பிடவும், பெருந்தீனி கூடாது, மதியம் நன்கு சாப்பிடவும்.

இரவில் அளவு குறைந்த உணவு நல்லது. இதனால் கல்லீரல் அதிகமாக வேலை செய்யாமல், வேலைப் பளு குறைந்து நோய்கள் வந்தால் விரைவில் குணமாக ஏதுவாகயிருக்கும்.

போஷாக்கு குறைவான உணவால் தான் கல்லீரல் பாதிக்கப்படுகிறது.

சத்தான உணவு கல்லீரலில் உள்ள திசுக்களை புதுப்பிக்கும். சேதமடைந்த திசுக்களும் மறு பிறவியெடுக்கும்.

கல்லீரல் சிகிச்சையானது நல்ல தரமான சத்துள்ள உணவை உட்கொள்ளுதலில் அடங்கும். தீராத கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் நல்ல, தரமான ஆகாரமில்லாததால் உண்டாகின்றன.

 

(Visited 396 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)