மீன் ஏன் சாப்பிட வேண்டும்?

Filed in உடல்நலம் by on November 8, 2013 0 Comments

healthy food fishமீன் எவ்வளவு சுவையானது என்பதை ரசித்துச் சாப்பிடும் மக்களால் மட்டும்தான் சொல்ல முடியும்.சில மாவட்ட மக்களுக்கு மீன் இல்லாமல் சாப்பாடே இருக்காது.குமரி மாவட்ட மக்கள் அதற்குச் சிறந்த உதாரணம்.ஆனால் ஒட்டு மொத்தமாக பார்த்தால் ரொம்ப பேர் மீனை ஒதுக்கிறார்கள்.வெஜ்பார்ட்டிகள் “சே,,சே மீன் நான்வெஜ்ப்பா நான் சாப்பிடமாட்டேன்” என்பார்கள். அசைவப் பிரியர்களில் கூட மீனைச் சாப்பிடாதவர்கள் எக்கச்சக்கம்.அவர்கள் “மீனெல்லாம் கடல் உணவுப்பா” என நழுவி விடுவார்கள்.

மீன் உணவு என்பது வெறும் சுவை தொடர்பானது அல்ல.ஆரோக்கியத்துக்கும் அறிவுக்கும் அது கேரண்டி தருகிறது என்கிறது ஆராய்ச்சி முடிவு ஒன்று. அதுவும் டீன் ஏஜ் மக்கள் மீனைச் சாப்பிட்டால் அவர்களுடைய மூளை வளர்ச்சி நல்ல கம்பீரமாக இருக்குமாம்.குறைந்தபட்சம் வாரம் இரண்டு தடவை மீனைச் சாப்பிடவேண்டும் என்பது தான் ஒரே ஒரு கண்டிஷன்.

பதின் வயதுப் பகுதியின் இரண்டாவது பகுதி,மூளையில் பெருமளவு மாற்றங்கள் நிகழும் பகுதி. ஆங்கிலத்தில் இதை பிலளாஸ்டிசிடி என அழைக்கிறார்கள்.அதாவது இந்தக் காலக்கட்டத்தில் தான் பதின் வயதினருடைய திறமை எப்படி இருக்கும்,அவர்களுடைய உணர்வு ரீதியான செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதையெல்லாம் மூளை முடிவு செய்கிறது.

இந்தக் காலக்கட்டதில் தான் மீனோட வேலையே ரொம்ப தேவைப்படுகிறது.அதாவது 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீனை வாரம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகள் சாப்பிட்டால் அவர்களுடைய அறிவு சூடு வைத்த ஆட்டோ மீட்டர் கணக்கா எகிறுமாம். மீனைப் பொரித்து உண்பதைவிட நன்றாக வேக வைத்து உண்பது தான் சிறந்தது என்பதைச் சொல்ல தேவையில்லை.

ஸ்வீடனில் நிகழ்த்தப்பட்ட விரிவான இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்கள் ஏறக்குறைய 5000 பேர். ஆராய்ச்சியின் முடிவில் மீன் உணவு உண்டவர்களின் திறன் வெகுவாக உயர்ந்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் தான் புத்திசாலித்தனத்தின் உச்சியில் இருந்தார்கள். டீன் ஏஜ் மக்களுடைய அறிவும்,எதையாச்சும் கற்றுக்கொள்ள வேண்டும் எனும் துறு துறு ஆர்வமும் மீனைச் சாப்பிட்டால் அதிகரிக்குமாம். அதிலும் குறிப்பாக ஒமேகா-3 நிரம்பியுள்ள மீன்களை உண்பது மிகவும் நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

ஒமேகா-3 எனும் மருத்துவ அதிசயம் பற்றிய தகவலுடன் அடுத்த போஸ்ட்டில் சந்த்திக்கலாம்.

உங்கள் கருத்துக்களையும் பதிய வைக்கலாமே!

(Visited 260 times, 1 visits today)

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)