இளநீர் இயற்கையான புத்துணர்ச்சி தரும் பானம்

Filed in உடல்நலம் by on August 29, 2016 0 Comments

இளநீர்  பெயரிலேயே இளமை,மென்மை. இது தேங்காயாக முற்றுவதற்கு முன் கிடைக்கும் நீர். இளநீர் இயற்கையான புத்துணர்ச்சி தரும் பானம். இதில் சத்து மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கான பண்புகள் அதிக அளவில் நிறைந்திருப்பதால் அதிக அளவு மக்களால் பருகப்படும் பானமாகும்.coconut

இந்த இளநீர் ஆரோக்கியமான தேங்காயை சேதமடையாமல் திறப்பதன் மூலம் பெறப்படுகிறது. அதன் உள்ளே தெளிவான இனிப்பு நிறைந்த திரவம், பல வகையான கலவைகள் நிறைந்த ரசாயானங்கள் அடங்கியது சர்க்கரை, வைட்டமின்கள் , கனிமங்கள் , மின்பகுளிகள் , என்சைம்கள் , அமினோ அமிலங்கள், சைட்டோகின் , மற்றும் தாவர ஹார்மோன்கள்.

Botanically, coconut plant belongs to the Arecaceae family of palm trees, and has the scientific name: Cocos nucifera.

ஒவ்வொரு தேங்காயும் விவசாய முறை மற்றும் அதன் அளவைப் பொறுத்து  தண்ணீர் 200 அல்லது 1000 மிலி கொண்டிருக்கலாம். தேங்காயின் வயதை பொறுத்து அவற்றின் நீரின் சுவை மாறுபடலாம். வயதில் குறைந்த இளனீரின் சுவை சிறிது கசப்பாகவும் ஊட்ட சத்துக்கள் இல்லாமலும் இருக்கும். மாறாக முற்றிய தேங்காயில் நீரின் அளவு குறைவாக இருக்கும். அவற்றின் சதைகள் வெள்ளையாகவும் மாறிவிடும். இவற்றிலிருந்து தேங்காய் பால் எடுக்கவும் மேலும் காய வைத்து தேங்காய் எண்ணெய் எடுக்கவும் பயன்படுகிறது..

தென்னை மரம் செழுமையான வெப்பமண்டல சூழ்நிலைகளில் நன்கு வளர்கிறது.   ஒரு தென்னை மரத்திலிருந்து பல நூற்றுக்கணக்கான தேங்காய்கள் ஒவ்வொரு பருவத்திலும் கிடைக்கிறது. தென்னை மரங்களில் பல்வேறு இனங்கள் வளர்க்கப்படுகின்றன. மண்ணில் உள்ள உப்பின் உள்ளடக்கம் மற்றும்  கடற்கரையிலிருந்து உள்ள தொலைவு, காலநிலை இவற்றை பொறுத்து இவற்றின் சுவை மற்றும் வாசனை மாறுபடுகிறது.

இளநீரால் கிடைக்க பெறும் உடல்நல நன்மைகள்

  • கோடை வெப்பத்தால் உடலில் ஏற்படும் வெப்பத்தை குறைக்க மிக உறுதுணையாக இருக்கிறது.

 

  • இதில் உள்ள எளிய சர்க்கரைகள், மின்பகுளிகள், மற்றும் கனிமங்கள் நிரம்பிய நீர் உடலின் உட்பகுதியில் ஏற்படும் வறட்சியை சமாளிக்க உதவுகிறது.

 

  • இளநீரில் உள்ள சைட்டோகைனின் (e.g., kinetin and trans-zeatin) முதுமையை (anti-ageing) தள்ளி போடவும், கேன்ஸரை (anti-carcinogenic) தடுக்கவும், இரத்தம் உறைவதை (anti-clot formation) தடுக்கவும் உதவுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கிறது.

 

  •  இளநீர் பொதுவாக வயிற்றுபோக்கு நோயாளிகளுக்கு திரவ இழப்பை ஈடுகட்டுவதற்கு பயன்படுகிறது.. இளநீரில் ஆஸ்மோலாரிட்டி  (osmolarity- the concentration of a solution) WHO பரிந்துரை செய்யும் (வாய்வழி வறட்சி நீக்கல் சிகிச்சை) தண்னீரை விட சற்று அதிகமாக உள்ளது. அமினோ அமிலங்கள், என்சைம்கள், கனிமங்கள், மற்றும் கொழுப்பு அமிலங்கள் போன்ற பிற உயிரியல் அங்கத்தினர்களின் கலவைகள் இந்த உயர் ஆஸ்மோலாரிட்டிக்கு காரணமாக இருக்கலாம். ஆயினும்கூட, WHO-ORS இன் தண்ணீர் போலல்லாமல், இளநீரில் சோடியம் மற்றும் குளோரைடு மிக குறைந்த, ஆனால் சர்க்கரைகள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்த அளவில் உள்ளது. இந்த நல்ல சீரான திரவ கலப்பு, மிகவும் அவசியமான கலோரிகள் சேர்ந்து, உடல் வறட்சி நிலைமைகளை சரி செய்ய ஒரு சந்தைகளில் கிடைக்கும் குளிர்பானங்களை விட சிறந்த பானமாக இருக்கிறது.

 

  • இளநீரில் இயற்கையிலேயே உருவாகும் உயிரியக்க நொதிகள் (என்சைம்கள்) அமிலம் ஃபாஸ்ஃபட்டேஸ், கேட்டலேஸ், டிஹைட்ரோஜெனேஸ், டையாஸ்டேஸ், பெராக்ஸைடேஸ், ஆர்.என்.ஏ-பாலிமரசுகள் முதலியன செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.

 

  • அதன் நீர் விகிதாசாரத்தில் ஆரஞ்சு போன்ற பழச்சாறுகளை விட கால்சியம், இரும்பு, மாங்கனீசு, மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற கனிமங்களின் அமைப்பு நிலைத்தன்மை அதிகமாக உள்ளது.

 

  • பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் வகையை சேர்ந்த riboflavin, niacin, thiamin, pyridoxine, and folates இதில் உள்ளது. இந்த வைட்டமின்கள் வெளியிலிருந்து உடலுக்கு கொடுக்கப்படும் ஆதாரங்கள் என்ற அடிப்படையில் அத்தியாவசியமானவை.

 

  • இளநீர் ஒரு மிக சிறந்த எலக்ட்ரோலைட் பொட்டாசியமாக உள்லது. 100 மிலி இளநீரில் 250 மி பொட்டாசியம் மற்றும் 105 மி.கி சோடியம் உள்ளது. இந்த எலெக்ரோலைட்தான் வயிற்றுபோக்கினால் ஏற்படும் நீர் வறட்சியை சமாளிக்க உதவுகிறது.
  • மேலும்,விட்டமின் சி (Ascorbic acid) சிறிய அளவில் உள்ளது; அது சுமார் 2.4 மிகி அல்லது வீதி 4% of RDA வழங்குகிறது.
(Visited 347 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)