புற்றுநோயை தடுக்கும் ஆஸ்பிரின்

Filed in உடல்நலம் by on May 28, 2016 0 Comments

ஆஸ்பிரின் புற்றுநோய் வளர்ச்சியை ஆரம்ப நிலையில் தடுக்க உதவுவது மற்றும் இதய நலத்திற்கு பாதுகாப்பு அளிப்பது என்பது தெரிந்த ஒன்று.

புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுப்பதில் ஆஸ்பிரினுக்கு உள்ள தொடர்பை குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 17 ஆய்வுகளை பகுத்தாய்ந்த கார்டிஃப்  பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் இந்த எளிய வலி நிவாரணி மார்பக, குடல் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோயால் நேரும் மரண அபாயத்தை ஐந்தில் ஒரு பங்கு குறைப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள்.Pro.PeterElwood

பொதுமக்களுக்கு ஆஸ்பிரினின் பயன்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது முக்கியம் என்கிறார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் ஆஸ்பிரின் இதயத்திற்கு உதவுவதாக முதலில் வெளிப்படுத்திய டாக்டர் பீட்டர் எல்வுட்.

 

கீமோதெரபி,ரேடியோதெரபி,சர்ஜரி மற்றும் வழக்கமான சிகிச்சையோடு ஆஸ்பிரினும் எடுத்துகொண்ட மார்பக, குடல் மற்றும் ப்ராஸ்டேட்புற்றுநோயாளிகளிடம் நடந்த பரிசோதனை முடிவுகளை ஆராய்ந்து பார்த்ததில் இருந்து கிடைக்கும் அத்தாட்சிகளை வைத்து பார்த்ததில் ஆஸ்பிரின், நோய் பரவுவதை தடுக்கிற செயல்களில் ஈடுபடுவதோடு நோயால் இறப்பு ஏற்படும் அபாயத்தை 15 – 20 சதவீதம் குறைப்பதாக தெரிவிக்கிறார்கள்.

தலைவலியை போக்க எடுத்துகொள்ளும் அளவை விட பல மடங்கு குறைந்த பேபி ஆஸ்பிரின் என்று சொல்லப்படும் 75 மி.கி. அளவிலேயே பயன்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.

ஆஸ்பிரின் பல முனைகளில் செயல்படுகிறது. நோயுற்ற செல்கள் தன்னைத்தானே அழித்துகொள்ள வழி செய்கிறது. அலையும் புற்று செல்கள் இரத்த நாளங்களில் அல்லது எலும்புகளில் ஒட்டிகொண்டு புதிய கட்டிகள் உருவாக விடாமல் தடுக்கிறது.

இந்த எளிய மாத்திரை இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவது குறிப்பிட தகுந்தது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இதில் இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். ஆஸ்பிரின் ஆராய்ச்சிகள் போதிய அளவு இல்லை. ஏனென்றால் ஆஸ்பிரின் மலிவானது. ஒரு பள்ளிக்கூட லேபில் தயாரிக்கமுடியும். மலிவானதால் லாபம் அதிகமில்லை.

ஆனால் புதிது புதிதாக வரும் புற்று நோய் மருந்துகள் விலையோ மிக அதிகம்.

ஆஸ்பிரின் இரைப்பை மற்றும் மூளையில் இரத்தகசிவை ஏற்படுத்தும் அபாயமுள்ளது என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்கிறார்கள் ஒரு சில சமூக ஆர்வமுள்ள மருத்துவர்கள்.

ஆஸ்பிரின் இரத்தகசிவை ஏற்படுத்த கூடியதுதான், இருந்தாலும் அதன் பயன்களை பார்க்கிற போது அதனால் ஏற்படும் அபாயம் ஓரங்கட்டத் தகுந்தது என்கிறார்கள்.

தினம் ஒரு ஆஸ்பிரின் புற்றுநோயை தடுக்கும் தணிக்கும்.

ஆனால் எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும் முன் மருத்துவ ஆலோசனை மிக முக்கியமானது.

(Visited 237 times, 1 visits today)

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)