அப்துல் கலாமின் அடையாளங்களில் பலரும் அறிந்திடாதது அவரது மருத்துவ முகம்

Filed in உடல்நலம் by on October 10, 2015 0 Comments

A.P.J.ABDUL KALAM

ஏவுகணை நாயகன், இளைஞர்களை நம்பியவர், பேராசிரியர் ,அதிகமான டாக்டர் பட்டங்களை பெற்றவர், விண்வெளி ஆராய்ச்சியாளர், பொக்ரான் அணுகுண்டு வெடிப்பின் சூத்ரதாரி ,பிரதமரின் அறிவியல், ஆலொசகர்,பாரத ரத்னா முன்னாள் ஜனாதிபதி என எண்ணற்ற அப்துல் கலாமின் அடையாளங்களில் பலரும் அறிந்திடாதது அவரது மருத்துவ முகம்.

ஆம். இதய நோயாளிகளுக்கான ஸ்டென்ட் கருவியிலும் போலியோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான காலிப்பர் தயாரிப்பிலும் கலாமின் பங்களிப்பு முக்கியமானவை.

இதயத்தின் ரத்தகுழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்க இருவகை சிகிச்சைகள் இருக்கின்றன. ஒன்று ஆஞ்சியோபிளாஸ்ட், மற்றொன்று பைபாஸ் சர்ஜரி. நெஞ்சுவலி வருகின்ற அனைவருக்கும் பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதயத்தின் மூன்று ரத்தகுழாய்களில் அடைப்பு ஏற்படும் போது அல்லது ஆஞ்சியோபிளாஸ்ட் கைகொடுக்காதபோது மட்டுமே பைபாஸ் சர்ஜரி செய்யப்படும்.
மற்றபடி ஆஞ்சியோபிளாஸ்ட்டேஉயிரை காப்பாற்றபோதுமானது.

இந்த ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சையில் உதவும் ஒரு கருவிதான் ஸ்டென்ட்.
அதாவது அடைப்பு ஏற்பட்டிருக்கும் இரத்தக்குழாயை சிறிது விரிதாக்குவார்கள். அதன்பிறகு ரத்தகுழாய் மீண்டும் சுருங்கி விடாதவாறு ஸ்டென்ட் கருவியை பொருத்துவார்கள். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், கோபால்ட் போன்ற உலோகங்களால் இந்த ஸ்டென்ட் கருவி பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இது சரசாரியாக இரண்டரை மில்லி மீட்டர் இருக்கும்.

இந்த ஸ்டென்டின் விலை 1990 களின் தொடக்கத்தில் லட்சங்களில் இருந்தது. அதிக விலை பற்றிய விஷயம் கலாமின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
ஏழைகளுக்கு இதயனோய் வந்தால் என்ன செய்வார்கள் என்று ஹைதரபாத்தில் இருக்கும் இதய சிகிச்சை மருத்துவரான சோமராஜுவிடம் கேட்டிருக்கின்றார். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதுதான் காரணம் என்று மருத்துவர் சோமராஜு சொல்லியிருக்கிறார்.

அதன்பிறகு இந்திய தொழில்நுட்பத்திலேயே டாக்டர் சோமராசு வுடன் இணைந்து 1998ல் ஸ்டென்ட் டை வெற்றிகரமாக வடிவைமைத்தார் அப்துல்கலாம். இதன் மூலம் லட்சங்களில் இருந்த ஸ்டென்ட் 20 ஆயிரம் ரூபாயாக குறைந்தது .Kalam-Raju-Stent என்ற இருவரின் பெயரிலேயே KR ஸ்டென்ட் என்றழைக்கப்படும் இந்த ஸ்டென்ட் மூலம் இன்றும் லட்சகணக்கான மக்களின் இதயங்களில் அப்துல்கலாம் வாழ்ந்துகொண்டிருக்கிறார் .

(Visited 121 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)