சிறுநீரகக் கோளாறு பாதித்த உழவர்களுக்கு உதவித்தொகை

Filed in உடல்நலம் by on August 20, 2013 1 Comment

சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு மாற்று சிகிச்சை மற்றும் டயாலிசிஸ் மேற்கொள்ளும் உழவர்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுள்ள 18 வயது முதல் 65 வயதுக்குள்பட்ட உழவர் உறுப்பினர்கள் சிறுநீரகக் கோளாறு காரணமாக பாதிப்படைந்து சிறுநீரக மாற்று சிகிச்சை மற்றும் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளும் நபர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1,000 வழங்க உத்தரவிட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் மாதாந்திர உதவித்தொகைப் பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான நபர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

சிறுநீரகக் கோளாறால் பாதிப்புக்குள்ளான 18 வயது முதல் 65 வயதுக்குட்பட்ட உழவர் உறுப்பினர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைப் பெற்று வரும் ஒரு ஆண்டு காலத்துக்கும், சிறுநீரகக் கோளாறு காரணமாக நாள்பட்ட சிறுநீரக டயாலிசிஸ் பாதிப்படைந்தவர்களுக்கு 6 மாத காலத்துக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 வழங்கப்படும்.

இந்த உதவித்தொகைப் பெற சிறுநீரக நோயால் பாதிப்படைந்தவர்கள் கிராமத்தில் உள்ள சுகாதார செவிலியர்கள் மூலமாக, அரசு வட்டார மருத்துவ அலுவலரிடம் சான்றிதழ் பெற்று அதை சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

(Visited 125 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)