புற்றுநோயை தடுக்கவும்,முதுமையை தள்ளிபோடவும் உதவும் தக்காளி

Filed in உடல்நலம் by on November 6, 2015 0 Comments

சுவை மட்டுமின்றி ஆரோக்கியத்துக்கான நல்ல விஷயங்களையும் உள்ளடக்கியது தக்காளி என்கிறார் மும்பையை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் சுமன் அகர்வால். இதோ அவர் தரும் தகவல்.

LYCOPENE என்கிற மிகவும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் தக்காளியில் அபிரிமிதமாக இருக்கின்றன.சமைத்த பிறகும், பதப்படுத்தப்பட்ட பிறகும் கூட தன் இயல்புகளை இழக்காத குணம் தக்காளிக்கு உண்டு. புற்றுநோயை தடுக்கவும்,முதுமையை தள்ளிபோடவும், டீஜெனரேட்டிவெ டிசீஸ் எனப்படும் சிதைவு நோய்களுக்கு எதிராகச் செயல்படக்கூடியது.

இது அடிபோனெக்டின்(Adiponectin) என்கிற ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதால் ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பை சீராக வைத்திருக்க உதவுவதோடு புற்றுநோய்க்கு எதிராகவும் செயல்படுகிறது. குறிப்பாக மாதவிடாய் நின்ற பெண்களுக்கு புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

மார்பக புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் LYCOPENE தக்காளியில் மிகுந்துள்ளதால் நாளொன்றுக்கு 2 முதல் 6 தக்காளியை எடுத்து கொள்வதன் மூலம் மாதவிடாய் நின்ற பெண்கள் மார்பக புற்றுநோயிலிருந்து காத்து கொள்ளலாம் என்று எண்டோக்ரினாலஜி அண்ட் மெட்டபாலிசம் இதழில் வெளியான ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆன்டி ஆக்சிடென்ட் மிகுந்த
தக்காளிக்கும் எலும்பின் உறுதிக்கும் மிகுந்த தொடர்புள்ளது என்பது கூடுதல் தகவல்.

(Visited 75 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)