பாதரசத்தின் வேதியியல் தன்மை மற்றும் அதன் பாதிப்புகள்.

Filed in உடல்நலம் by on October 10, 2015 0 Comments

பாதரசத்தின் வேதியியல் தன்மை மற்றும் அதன் பாதிப்புகள்.

பாதரசம் என்பது நீர்ம உலோகம்.உலோகங்களிலேயே மிகவும் அடர்த்தியானது பாதரசம் தான்.13.6 மி.லி. அளவு பாதரசம் ஒரு கிலோ எடை கொண்டது என்றால் அதன் அடர்த்தியை புரிந்து கொள்ளமுடியும்.

பாதரசம் உடலுக்குள் சென்று ரத்தம் தசையில் கலந்து விட்டால் அதனை எந்த சிகிச்சையாலும் பிரிக்க முடியாது. ரத்தத்தின் அடர்த்தியை அதிகரித்து மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களை அடைத்துவிடும். இதனால் உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவங்கள் ஏராளம்.

பாதரசத்தை வெப்பபடுத்தும்போது அதிலிருந்து வெளிப்படும் ஆவி நுரையீரல் மற்றும் சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தவல்லது. எந்த ஒரு உலோகத்துடனும் உடனடியாக வினை புரியக்கூடிய இயல்புடையது.தங்கத்தை கூட வெள்ளி நிறத்தில் மாற்றிவிடும்.

இதன் அபாயத்தை உணர்ந்து வெளிநாடுகளில் இதனை மிகவும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் கையாள்கிறார்கள். நம் நாட்டிலோ மிகவும் சாதரணமாக கையாளப்படுகிறது. அதோடு யார் நினைத்தலும் வாங்க முடியும் என்கிற அளவில் பாதரச விற்பனை இருக்கிறது.

மனிதர்களுக்கும் சூழலியலுக்கும் தீங்கு விளைவிப்பதால் இதற்கு மாற்றுகள் வந்து விட்டன. அதனால் இதனை தவிர்ப்பது நல்லது என்கிறார் வேதியியல் ஆசிரியர் ரவிசுந்தர பாரதி

(Visited 847 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)