சிறந்த ஆரோக்கியத்திற்கான உணவு

Filed in உடல்நலம் by on January 2, 2014 0 Comments

சிறந்த ஆரோக்கியத்திற்கான உணவு

உணவே மருந்து என்பது நம் முன்னோர்களின் வாக்கு. ஆனால், தற்போது மருந்தே உணவு என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளளோம். உலக வங்கியின் கணக்குப்படி, உலகின் எடை குறைவான குழந்தைகளில் 40.9 சதவிகிதத்தினரும், ஊட்டச்சத்து குறைவால் வளர்ச்சி தடைபட்டுள்ள குழந்தைகளில் 34 சதவிகிதத்தினரும், இந்தியக் குழந்தைகள்தான். அரிசி, கோதுமைக்கு மாற்றாக எதைச் சாப்பிடலாம் என்ற தேடலில், சர்வதேச அளவில் இன்று முன் நிற்பவை சிறு மற்றும் குறு தானியங்கள்தான்.

தானியங்களில் உள்ள உணவுச்சத்துக்கள்

Whole-Grainsசிறுதானியங்களில் மிகுதியான தாதுப் பொருட்கள், உயிர்ச்சத்து, நார்ச்சத்து, குறைந்த அளவு கொழுப்புச்சத்து அடங்கியிருப்பதனால், இவை சிறந்த ஆரோக்கியத்திற்கான உணவு ஆக கருதப்படுகின்றன. மேலும், இந்த தானியங்களில் உள்ள உணவுச்சத்துக்கள், குறிப்பாக கால்சியம், இரும்புச் சத்து பிற உணவு தானியங்களைவிட அதிகமாக உள்ளன. எனவே இவை பெண்கள், வளரும் குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் தன்மையுடையனவாக உள்ளன. அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் இவை சர்க்கரை வியாதி உடையவர்களுக்கு சிறந்த உணவாகக் கருதப்படுகின்றது.

இத்தானியங்களில் மிகவும் சத்து நிறைந்த குளூட்டன் ஆனது, அமிலத்தன்மையற்ற ஒரு உணவு வகை. எனவேதான், இவை எளிதில் செறிமானமாகக்கூடிய தன்மை கொண்டதாக உள்ளன. இவற்றில் அதிக சதவிகிதம் புரதம், அதிக அளவிலான நார்ச்சத்து, வைட்டமின் பி குழுமத்தைச் சார்ந்த நியாசின், தையமின், ரைபோ பிலேவின், லெசிதின், வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன. இது மட்டுமின்றி இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய சத்துகளும் அதிகமாக உள்ளன.

தாவர இராசாயனம், தாவர அமிலம் ஆகியவை தானியங்களில் காணப்படுவதால் உடலில் தேவையற்ற கொழுப்புக்கள் (கொலஸ்ட்ரால்) குறைகின்றன. இதனால் இதயம் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றது. அதுபோலவே அதிலுள்ள பைட்டேட் புற்றுநோய் ஏற்படாமல் காக்க உதவுகிறது. எலும்பு வளர்ச்சியடைவதிலும், உடல்பருமனைக் குறைப்பதிலும் இத்தானியங்கள் பெரும் பங்குவகிக்கின்றன. அதிகமான நார்ச்சத்துக் கொண்டுள்ளதால் சிறந்த மலமிழக்கியாகவும் செயல்படுகின்றன.

(Visited 89 times, 1 visits today)

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)