காய்கறிகளின் மருத்துவக் குணங்கள் – கே.எஸ்.சுப்பிரமணி

Filed in உடல்நலம் by on September 9, 2012 0 Comments

காய்கறிகளின் மருத்துவக் குணங்கள் – கே.எஸ்.சுப்பிரமணி

எந்தெந்தக் காய்கறிகள் உங்கள் உடல் கோளாறுகளைக் குணமாக்கும்?

ஆஸ்துமா குணமாக: முட்டைக் கோஸ், முருக்கைக்காய், புதினா, வெள்ளைப்பூண்டு, மணத்தக்காளி, பசலைக்கீரை, தக்காளி, லெட்டூஸ், செலரி.

இருமல் குணமாக: சுரைக்காய், வெண்டைக்காய், இஞ்சி, புதினா, வெள்ளைப்பூண்டு, முட்டைக்கோஸ்.

இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு முதலியவற்றைக் குணப்படுத்த: காரட், பச்சைப் பட்டாணி, காலிஃபிளவர், புடலங்காய், முருங்கைக்காய், முள்ளங்கி, வெண்டைக்காய், வெங்காயம், வெள்ளைப் பூண்டு, மணத்தக்காளி, இஞ்சி, வெங்காயம், காளான், பூசணி, பசலைக்கீரை, லெட்டூஸ், சோயா, செலரி, கொத்துமல்லி. இளமைத்துடிப்புடனும் இளமையான தோற்றத்துடனும் உடல் உறுதிபெற்று ஆரோக்கியமாய் வாழ: வல்லாரைக் கீரை, சோயா, வெள்ளைப்பூண்டு, பீட்ரூட், முள்ளங்கி, காரட், முட்டைக்கோஸ், முருங்கைக்கீரை, பச்சைப்பட்டாணி, பசலைக்கீரை, புதினா.

உடலுக்கு உடனே சக்தி கிடைக்க: சோயாபீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி, வள்ளிக்கிழங்கு.

உயர் இரத்த அழுத்தம் குணமாக: பசலைக்கீரை, வெள்ளரிக்காய், அவரைக்காய், வாழைத்தண்டு, காரட், வெள்ளைப்பூண்டு, வெங்காயம், காளான், செலரி.

உமிழ்நீர் நன்கு சுரக்க, சுவை நரம்புகள் சக்தி பெற: வாழைக்காய், புதனாக்கீரை, கொத்தமல்லி.

ஒல்லியானவர்கள் குண்டானவர்களாய் மாற: பச்சைப்பட்டாணி, காலிஃபிளவர், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு.

இரத்த சோகை குணமாக: காரட், பாகற்காய், முருங்கைக் கீரை, பீட்ரூட், சேப்பங்கீரை, கோவைக்காய், மணத்தக்காளி(சிறந்தது), பசலைக்கீரை (சிறந்தது), வெங்காயம், லெட்டூஸ், வல்லாரை.

உடல் பருமன் குறைய: முட்டைக்கோஸ், வெள்ளரிக்காய், புடலங்காய், வாழைத்தண்டு, கத்தரிக்காய், பூசணிக்காய், பசலைக்கீரை.

கண்பார்வை தெளிவாகத் தெரிய: மணத்தக்காளி, காரட், முருங்கைக் கீரை, பச்சைப் பட்டாணி, பீட்ரூட், முட்டைக்கோஸ், அவரைக்காய், புதினா, பசலைக்கீரை, தக்காளி, காளான், கொத்துமல்லி.

காய்ச்சல் தணிய: பாகற்காய், புடலங்காய், வள்ளிக்கிழங்கு, மணத்தக்காளி, இஞ்சி, வெங்காயம், கொத்துமல்லி.

காலரா குணமாக: முருங்கைக் கீரை, வெள்ளரிக்காய், வெங்காயம். கருக்கலைப்பைத் தவிர்க்க (அபார்ஷனைக் தவிர்க்கவும், குழந்தை உறுதியுடன் வளரவும்): பசலைக்கீரை, லெட்டூஸ் கீரை.

குழந்தை பிறப்பதைத் தாமதப்படுத்த (குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம்): பச்சைப் பட்டாணி, புதினாக்கீரை.

கொலாஸ்டிரல் குறைய: உருளைக்கிழங்கு, தக்காளி, பச்சைப் பட்டாணி, அவரை, முருங்கைக்காய், கறிவேப்பிலை, புதினா, முள்ளங்கி, வாழைத்தண்டு, வெள்ளைப்பூண்டு, வெங்காயம், வல்லாரை, லெட்டூஸ், கொத்துமல்லி. சளித்தொல்லை குணமாக: காரட், புதினா, கத்தரிக்காய், வெள்ளைப்பூண்டு, இஞ்சி, வெங்காயம், பசலைக் கீரை.

சாப்பிட்ட உணவு நன்கு செரிமானம் ஆக: முருங்கைக்காய், காரட், உருளைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு, இஞ்சி உட்பட மற்ற காய்கறிகளும்.

சிறுநீரகக் கோளாறுகள் குணமாக : வெள்ளரிக்காய், பிட்ரூட், காரட், முள்ளங்கி, புதினா, முருங்கைக்காய், தக்காளி, வெண்டைக்காய், பறங்கிக்காய், சுரைக்காய், மணத்தக்காளி, கொத்துமல்லி.

தலைவலி குணமாக: காலிஃபிளவர், மணத்தக்காளி, இஞ்சி, வெங்காயம்.

தாய்ப்பால் நன்கு சுரக்க: வெள்ளைப்பூண்டு, லெட்டூஸ், காரட், முருங்கைக்காய், முருங்கைக்கீரை, தாய்ப்பால் கெட்டியாகச் சுரக்க பசலைக்கீரை, தாய்ப்பாலை வற்றச் செய்ய கொத்துமல்லி.

தொற்றுநோய் பரவாமல் தடுக்க: பாகற்காய், முட்டைக்கோஸ்.

தொந்தி கரைய: வாழைத்தண்டு, பசலைக்கீரை.

தொழுநோய் குணமாக: பாகற்காய், முள்ளங்கி, பாலக்கீரை, வல்லாரைக்கீரை, பீர்க்கங்காய்.

தொண்டையில் புண்: முள்ளங்கி, வெள்ளைப்பூண்டு.

தொண்டைக்கட்டு குணமாகவும், இனிமையான குரல் வளத்தைப் பாடகர்கள் பெறவும்: புதினாக்கீரை, பசலைக்கீரை, கத்தரிக்காய்.

நன்கு பசி எடுத்துச் சாப்பிடப் பயன்படும் காய்கறிகள்: கருணைக்கிழங்கு, பசலைக்கீரை, காரட், பச்சைப் பட்டாணி, பாகற்காய், வெள்ளரிக்காய், முள்ளங்கி, புதினா, சுரைக்காய், மணத்தக்காளி.

நாக்கு வறட்சி அகல: புடலங்காய், வெள்ளரிக்காய், காரட், சுரைக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பூசணிக்காய்.

எல்லாவிதமான புற்றுநோய்களும் குணமாக: பலவிதமான காய்கறிகள் கீரைகள் கலந்த கலவையில் தினமும் 600 கிராம் பச்சையாக சாப்பிட வேண்டும். இதில் பாதியை சமைத்துச் சாப்பிடலாம்.

நீரிழிவு நோய் குணமாகப் பயன்படும் காய்கறிகள்: அவரைக்காய், காரட், காலிஃபிளவர், பாகற்காய், முருங்கைக்காய், வாழைத்தண்டு, கோவைக்காய், காளான், சோயாபீன்ஸ், பீர்க்கன்காய்.

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க: முட்டைக்கோஸ், அவரை, வெள்ளரிக்காய், பசலைக்கீரை, காரட், முருங்கைக்காய், புதினா, வெள்ளைப்பூண்டு, மணத்தக்காளி, பசலைக்கீரை, கொத்துமல்லி.

நன்றாய்த் தூக்கம் ஏற்பட: சுரைக்காய், முட்டைக்கோஸ், லெட்டூஸ், மணத்தக்காளி, கொத்துமல்லி, செலரி.

(Visited 1,207 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)