உடலின் உறுப்புகள் சீராக செயல்பட தண்ணீர்

Filed in உடல்நலம் by on January 25, 2014 0 Comments

நமது உடலின் உறுப்புகள் சீராக செயல்பட தண்ணீர்

ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. உடலில் உள்ள ஒவ்வொரு இயக்கத்திற்கான பணியையும் சிறப்பாக செய்து முடிக்க தண்ணீர் இன்றியமையாததாக உள்ளது. குடிக்கும் தண்ணீரில் ஏலக்காய் தோலையோ, ஆரஞ்ச் தோலையோ போட்டு வைத்தால் தண்ணீர் வாசனையாக இருப்பதோடு, அதில் கலந்துள்ள கண்ணுக்கு தெரியாத கிருமிகளும் கொல்லப்படும்.

சாப்பிடும் முன்:

சாப்பிட உட்காரு முன், தேவையான அளவு சூடு செய்த தண்ணீரை ஒரு டம்ளர் குடிக்கலாம். அந்த மாதிரி சாப்பிட்ட பின்னும் ஒரு டம்ளர் வெந்நீர் குடிங்க, அந்த வெந்நீர் வெது, வெதுப்பாக இருக்க வேண்டும். அதுக்காக நாக்கை சுடும் அளவுக்கு தண்ணீர் குடிக்க கூடாது. இந்த வெந்நீர் வைத்தியத்தால் பல ஆச்சரியமான உண்மைகள் இருக்கும்.

1. சாப்பிடுவதற்கு முன்பு குடிக்கிற வெந்நீர் நம்முடைய வயிறு நிரம்பிய மாதிரி ஒரு திருப்தியைக் கொடுக்கும். ஸ்வீட், காரம் என்று பிடித்த பண்டங்களை பேச்சு வாக்கில் சாப்பிட கூடாது. வடையோ, பாயாசமோ எது சாப்பிட்டாலும் கொஞ்சம் போதும்னு சொல்ல வைக்கும் சக்தி வெந்நீருக்கு உண்டு.

2. அது மட்டுமில்லாமல், இந்த வெந்நீர் வைத்தியம் பண்றதாலே நாக்கு வழவழப்பு, வாய் துர்நாற்றம், தொண்டைக் கரகரப்பு, முகத்துல வர்ற பரு, கரும்புள்ளிகள் எல்லாம் மறைந்துவிடும். உள்ளே சுத்தமாக இருந்தா வெளியேயும் சுத்தமாக இருக்கலாம்.

3.நாம் தினமுமே இப்படி வெந்நீர் குடிக்கலாம். அவ்வாறு குடித்து வந்தால் உடல் சீரான இயக்கத்தோடு செயல்பட்டு உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

குளிர் நீர் குடித்தால் எடை கூடுமா?

அப்படியெல்லாம் இல்லை. குளிந்த தண்ணீரோ, வெந்நீரோ எதுவானாலும் அதை நம் உடல், தன்னுடைய வெப்பநிலைக்கு மாற்றித்தான் உபயோகிக்கும். வெந்நீர் குடித்தால், கொழுப்பு சேராது என்று சொல்வதன் பின்னணியும் இது தான். வெந்நீரை தனது வெப்பநிலைக்கு மாற்றும் வளர்ச்சிதை மாற்ற இயக்கம் அதிகரிப்பதால், உடலில் கொழுப்பு தங்குவதில்லை.

யாருக்கு தண்ணீர் கூடாது?

சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இதய நோயாளிகளுக்கு (இதயத்தின் சுருங்கி விரியும் தன்மை 30க்கு குறைவானால்) நாளொன்றுக்கு ஆயிரம் மி.லி. தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும். கிட்னி பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிப்பின் தீவிரம் பொறுத்து தண்ணீரின் அளவு 500 மி.லி. வரை குறைக்கப்படவும் கூடும். தண்ணீரை அதிகம் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளில் முக்கியமானது உடலை சுத்தப்படுத்துவது. அதுமட்டுமல்லாமல் செரிமானம் குறைவாக ஏற்பட்டால், ஒரு நாளைக்கு கூடுதலாக இரண்டு டம்ளர் குடித்தால் ஜீரணம் நன்றாக நடைபெறும்.

அதிலும் தினமும் காலையில் ஒரு டம்ளர் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் இருக்கும் டாக்ஸின்கள் வெளியேறும். மேலும் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு அல்லது தேனை கலந்து குடித்தால் உடலுக்கு நல்லது. இன்றைக்கு பெருபாலானோர் மலச்சிக்கல் பிரச்னையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு மருத்துவ செலவு இல்லாமல் வைத்தியம் பார்க்க நினைப்பவர்கள் ஒரு டம்ளர் சுடு தண்ணீரை குடிக்க வேண்டும். அப்படி குடித்தால் மலச்சிக்கல் பிரச்னை தீர்ந்துவிடும். வயிற்றில் நிறைய கழிவு பொருட்கள் குடலில் தங்குவதால் தான் மலச்சிக்கல் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

அப்போது சுடு தண்ணீரை குடிக்க வேண்டும். ஏனெனில் சுடு தண்ணீர் உணவு பொருட்களை எளிதாக உடைக்கும் தன்மை கொண்டது. அதனால் குடலில் தங்கிவிடும் தேவையற்ற கழிவுகளை நீக்கி, குடலை நன்கு வேலை செய்ய வைக்கும். இதனால் மலச்சிக்கல் போன்ற வயிறு பிரச்னைகள் நீங்கும். மேலும் நிபுணர்கள் பலர் உடல் எடையை குறைக்க வேண்டுமானால் ஒரு டம்ளர் சுடு தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேனை ஊற்றிக் குடிக்க வேண்டும் என்று கூறுவார்கள்.

நாம் சாப்பிடும் உணவு பொருட்களை எளிதில் உடைப்பதால், உடலில் சேரும் கொழுப்புகளை கரைத்து, உடல் எடையை குறைக்கும். அதிலும் சாப்பிட்ட பிறகு சுடு தண்ணீரை குடிக்க வேண்டும். எலுமிச்சை சாறு சேர்ப்பதற்கு காரணம், அதில் உள்ள நார்ச்சத்து, அடிக்கடி ஏற்படும் பசியை கட்டுப்படுத்தும். இருமல் மற்றும் சளியின் காரணமாக தொண்டை மிகவும் வலி ஏற்படும். அப்போது சுடு நீரை குடித்தால் வலி குறையும். நீர்மமாக உள்ள சளி கட்டியாகி, எளிதில் வெளியேறிவிடும்.சுடு தண்ணீரையோ அல்லது சூடான பொருட்களையோ சாப்பிடும் போது அதிகமாக வியர்க்கும்.

ஏனெனில் சூடான பொருள் உடலில் செல்லும்போது, உடலில் வெப்ப நிலை அதிகரித்து, உடலை குளிர்ச்சி ஆக்குவதற்காக வியர்க்கிறது.வியர்வையால் சருமத்தில் இருக்கும் செல்களில் உள்ள அதிகமான தண்ணீர் மற்றும் உப்பு, உடலில் இருந்து வெளியேறிவிடுகிறது. எப்போது சுடு தண்ணீரை குடிக்கிறோமோ, அப்போது உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைந்து, ரத்த குழாய்கள் சற்று விரிவடைந்து, உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றது.

(Visited 505 times, 1 visits today)

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)