உடம்பு குறைய சில டிப்ஸ்

Filed in உடல்நலம் by on November 24, 2012 0 Comments
 1. நேரா நேரத்திற்கு உணவை சாப்பிட வேண்டும்.
 2. காலை உணவை விரும்பியதெல்லாமாகாவும் அதிகமாகவும் கூட சாப்பிடலாம்..மதியத்திற்கு ஒரு அளவாக சாப்பிடவும்.இரவில் ரொம்ப கம்மியாக சாப்பிடவும்..காலையில் அரசன் போல், மதியம் அரசி போல், இரவில் ஆண்டி போல் சாப்பிடணும் என்று இதைதான் சொல்வார்களோ?
 3. இரவு கூடுமானவரை நான் வெஜ் தவிர்க்கவும்..அப்படியே எப்பவாவது பார்ட்டி அது இது என்றால் சாப்பிட்ட பின் 2 மணிநேரம் கழித்து கொஞ்சம் நடையோ உடற்பயிற்ச்சியோ செய்து விட்டு தூங்க போகலாம்
 4. தண்ணீர் நிறையளவில் குடிக்க வேண்டும்..இப்படி பழக்கமில்லாதவர்கள் முதல் சில நாள் கஷ்டப்பட்டு அலாரம் வைத்தாவது குடிக்கலாம்..ஒரே வாரத்தில் தாகம் அந்தளவுக்கு வந்திருக்கும்..பிறகு நம்மையறியாமல் தண்ணீர் உள்ளே போகும்
 5. ஒரு போதும் முழுக்க முழுக்க டயட் கன்ட்ரோல் என்று எதையுமே தொடாமல் இருக்க கூடாது..இது ஒரு வித வெறுப்பை உண்டாக்கும்..விரும்பியதை ஒன்றிரண்டு ஸ்பூன் வைத்து தினமும் சாப்பிடலாம்
 6. ஐஸ் க்ரீம் ,சாக்கலேட் போன்றவற்றை தவிர்க்கவோ வாரம் ஒருமுறை சாப்பிடவோ செய்யலாம்
 7. தினம் இரவு 1 கப் தண்ணீரில் 1 ஸ்பூன் பட்டை பொடியை கொதிக்க வைத்து சூடாறியதும் தேன் கலந்து இரவு படுக்கும் முன் 1/2 கப்பும் மீதத்தை காலை எழுந்ததும் வெறும் வயிற்றிலும் குடிக்கவும்..இது உடல் வேகமாக இளைக்க உதவும்
 8. உடம்பு குறைக்க போகிறேன் என்று நாலு பேரிடம் சொல்லி வைக்கவும்..இதனால் அவர்களை அடுத்த முறை பார்க்கையில் குறைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்
 9. ட்ரெஸ்ஸை 1 இன்ச் அதிகமாக கூடி தைக்க சொல்லாமல் சரியான அளவுக்கு கொடுக்கவும்
 10. உடம்பு முதல் சில மாதங்களுக்கு தான் குறைக்க கஷ்டம் கொஞ்சம் குறைக்க தொடங்கிவிட்டால் பிறகு பழைபடி ரொம்பவும் கடுமையான உடற்பயிற்ச்சி கூட வேண்டாம் தாமாக உடம்பு குறையும்
 11. இரவில் என்றுமே லைட்டாக உணவாக சாப்பிடவும்.காலையிலும் கூடுமானவரை ஓட்ஸ் ,சத்து மாவு,கார்ன் ஃப்லேக்ஸ் இது போல் சாப்பிடவும்..மதியம் மட்டும் 1 கப் சாதமும் மீதம் விதவிதமாக பொரியலோ குழம்போ சேர்த்து சாப்பிடலாம்..மீன் தாராளமாக சாப்பிடலாம்..சிக்கன் வாரம் ஒரு முறையும் சாப்பிடலாம்..மட்டனை கூடுமானவரை குறைப்பது நல்லது
 12. குழந்தைகளை வைத்துக் கொண்டு செய்ய முடியவில்லையே என்று வருத்தம்  வேண்டாம்.அவர்களோடு எண்ணி,பாடிக் கொண்டே ஸ்கிப்பிங் செய்வதும் படுத்துக் கொண்டு முட்டியில் அவர்களை வைத்து முட்டியை மடக்கி மடக்கி தூக்கி விளையாடுவது அவரகளுக்கு ரொம்பவும் பிடிக்கும்.உடம்பும் மெலியும்
 13. துணி கைய்யால் துவைப்பது,தரை துடைப்பது நல்ல எக்செர்சைஸ்..
 14. மூச்சுப் பயிற்ச்சி சிறந்த ஒன்று.அதற்கு முறையாக பயிலவோ சில தளங்களை பார்த்து கற்றுக் கொள்ளவோ செய்யலாம்
 15. பகலில் தூங்குவது நல்லது தான் ஆனால் வெறும் 30 நிமிடம் தான்..மனிக்கணக்கில் தூங்குவதை தவிர்க்கவும்
 16. கூடுமானவரை சும்மா இருக்காமல் எதாவது வேலையில் ஈடுபடவும்..முக்கியமாக டிவி பார்ப்பதை குறைக்கவும்..மெகா சீரியால் பார்ப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும்
 17. நேரத்துக்கு தூங்க போய் நேரத்துக்கு எழுந்து பழகவும்
 
Posted by தளிகா
 
(Visited 1,705 times, 1 visits today)

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)